இலங்கையில் சுமார் 10 மாதங்களுக்குப் பின்னர் விமான நிலையங்கள் இன்று (வியாழக்கிழமை) திறக்கப்பட்டுள்ள நிலையில், முதல் விமானம் ஓமானில் இருந்து வந்துள்ளது.
ஓமானில் இருந்து குறித்த வணிக விமானம் இன்று காலை 07.40 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளது.
இந்த விமானத்தின் மூலம் சுமார் 50 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர் என்பதுடன், அவர்கள் இராணுவத்தினரால் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் வணிக விமானங்கள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளமையினால் பயணிகள் மீண்டும் சாதாரண விமான கட்டணத்தைப் பெற முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கொரோனா அச்சம் காரணமாக விமான நிலையங்கள் மூடப்பட்ட காலகட்டத்தில் சிறப்பு விமானங்கள் மட்டுமே செயற்பட்டு வந்தன. அவற்றில் விமானக் கட்டணங்கள் மிக அதிகமாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் கட்சிகள் பெறும் வாக்குகளின் வீதம் தொடர்பி
இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களைச் சேர்ந்
மேல், சப்ரகமுவ மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் க
தேசிய மின்சார கேள்வி குறைந்தளவான மட்டத்தில் காணப்பட்
திக்வெல்ல - பெலியத்த பிரதான வீதியில் வலஸ்கல பகுதியில்
கொழும்பின் புறநகர் பகுதியில் சிறப்பு அதிரடி படையினரு
தமிழர்களுக்கான அரசியல் தீர்வைப் பொறுத்தவரை, மாகாணசபை
பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
வீறு நடைபோட்டு மீண்டும் அரசியல் களத்தில் இறங்கிய ராஜப
இலங்கை கடற்படையினரால் யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்கள
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிது
2022 ஆம் ஆண்டிற்கான ´புக்கர்´ விருது இலங்கை எழுத்தாளர
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் காவல்துறையினரால் விசேட சு
அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத
