பிக்பொஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமான இலங்கையைச் சேர்ந்த தர்ஷன், கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது
நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பொஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமான தர்ஷன், இந்நிகழ்ச்சி மூலம் இலட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்தார்.
பிக்பொஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், தர்ஷன் ஹீரோவாக நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி மலையாளத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர்ஹிட்டான ‘ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’ படத்தின் தமிழ் ரீமேக்கில் தர்ஷன் நடிக்கவுள்ளார்.
இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பதோடு, தர்ஷனின் தந்தை கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளார்.
மேலும் நகைச்சுவை நடிகர் யோகிபாபுவும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
அறிமுக இயக்குனர்கள் சரவணன், சபரி ஆகியோர் இப்படத்தை இயக்கவுள்ளனர். இவர்கள் இருவரும் கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவி இயக்குனர்களாக பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
நயன்தாரா, விக்கி திருமணம்- ஷாருக்கான், ரஜினி, டிடி என தி
தமிழில் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘பம்மல் க
நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு ரசிகர்க
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், ‘ஸ்ட
பிக்பாஸ் 4வது சீசன் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இந்த
தொழிலதிபர் லெஜன்ட் சரவணன், தமிழ் திரையுலகில் நடிகராகவ
நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘ந
நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்து வரும் &lsq
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருவாக்கிய பயணி என்ற ஆல்பம் பாடல
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் லேட்டஸ்ட் போட்டோஷூட
தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர்
இந்தி திரையுலக பிரபல பெண் இயக்குனர் பராகான். இவர் தொலை
அமெரிக்காவை சேர்ந்த நடிகை டகோடா ஸ்கை, ஆபாச படங்களில் ந
பரத் நடித்த கூடல்நகர் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான
கே.ஜி.எப் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாந