சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரிவு உறுப்பினர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் 28ஆம் திகதி (வியாழக்கிழமை) ஆரம்பமாகவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் கிராமத்துடன் கலந்துரையாடல்´ நிகழ்ச்சித் திட்டத்தின் 7வது வேலைத்திட்டத்தில் நேற்று பங்கேற்றபோதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
இந்தியாவில் இருந்து 600,000 ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசிகளை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதன்படி எதிர்வரும் 27ஆம் திகதி புதன்கிழமை 600,000 டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசி இலங்கைக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
300,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தும் முகமாக இந்தியாவிடம் இருந்து குறித்த 6 இலட்சம் தடுப்பூசி பெற்றுக்கொள்ளடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்தியா, சீனா மற்றும் ரஷ்யாவிலிருந்து கொவிட் தடுப்பூசிகளை வாங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
ஒக்ஸ்போர்ட்-ஆஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்த இலங்கை அரசாங்கம் நேற்று முன்தினம் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் உரப் பற்றாக்குறையால் விநியோகஸ்தர்கள் போர
தீபாவளியை முன்னிட்டு ஒக்டோபர் 25 ஆம் திகதி செவ்வாய்க்க
இலங்கையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மா
மன்னார் சதோச மனித புதைகுழி மற்றும் திருக்கேதீஸ்வர மனி
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் தரவுகளின்படி
யாழ்.பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நி
பிரதேசத்தில் 47,000 அமெரிக்க டொலர்களை பணம் தூய்மையாக்கல்
பாதாள உலக குழு தலைவர்களில் ஒருவரான கிம்புலா எலே குண
இலங்கை, தற்போது கட்டிட நிர்மாணத்துறையில் மூன்று மெற்ற
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் தொடர் போ
இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு இன்று கிராமப்புற மற
லிட்ரோ நிறுவன எரிவாயு விலை அத
மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு மாதாந்தம் 100
எரிவாயுவுக்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த வேண்
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் முதற்கட்டமாக இம்மாதத்தின
