சேலம் உருக்காலை நிர்வாகத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கண்டித்து உருக்காலை INTUC தொழிற்சங்க ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுத்துறை நிறுவனமான சேலம் உருக்காலையை மத்திய அரசு தனியார் மயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்த தனியார் மயமாக்கும் முடிவை கண்டித்து சேலம் உருக்காலை ஊழியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் இன்று உருக்காலையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கண்டித்து சேலம் INTUC சார்பில் 100 க்கும் மேற்பட்ட உருக்காலை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உருக்காலை வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் உருக்காலையை தனியார் மயமாக்குவதை கை விட வேண்டும், செயில் நிர்வாகத்தின் பங்கு விற்பனையை கைவிட வேண்டும், ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், ஊழியர்கள் ஆள் பற்றாக்குறையை நீக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசையும், செயில் நிர்வாகத்தையும் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டம் குறித்து ஊழியர்கள் கூறும் போது உருக்காலையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அடுத்த வாரத்தில் உருக்காலையை பார்வையிட தனியார் நிறுவனங்கள் வர உள்ளதாக தகவல் வந்துள்ளது. அவ்வாறு வரும் பட்சத்தில் அவர்களை பாரவியிட ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் எனவும் தெரிவித்தனர்
பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்
சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இண்டர் நயன்தாரா வாடகை தாயை அமர்த்தி குழந்தை பெற்ற விவகாரம் ப தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும், புதுச் பர்தா தொடர்பான மேல் முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஐஸ் போதைப்பொ தென்கொரிய நாட்டின் ராணுவ மந்திரி சூ வூக் 3 நாள் அரசு மு ஆர்.ஆர்.ஆர் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு உக்ரைனி இந்தியாவில் நடந்து வரும் நெடுஞ்சாலை திட்டங்களில் சீன துபாய் எக்ஸ்போவில் பங்கேற்க அரசு முறை பயணமாக சென்னையி சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள தனது அலுவலகத்த தி.மு.க. -காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவ ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி பகுதியில் உள்ள இரண்டாம் த முன்னாள் ஜனாதிபதி டாக்டர். ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் (
