மட்டக்களப்பு- கோட்டமுனை மூர் வீதியில், முதியவர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்து 7 தினங்களில் அவரது மனைவியும் கொரோனா தொற்றினால் இன்று (வெள்ளிக்கிழமை ) உயிரிழந்துள்ளார் என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக நாகலிங்கம் மயூரன் மேலும் கூறியுள்ளதாவது, “கோட்டமுனை மூர் வீதியினைச் சேர்ந்த 79 வயதுடைய ஆண் ஒருவர் கடந்த 7 தினங்களுக்கு முன்னர் மாரடைப்பால் உயிரிழந்துள்ள நிலையில், அவருக்கு கொரோனா தொற்றுதி கண்டறியப்பட்டது.
இதனையடுத்து குறித்த குடும்பத்தில் உயிரிழந்த முதியவரின் மனைவி உட்பட 5 பேருக்கு தொற்றுதி கண்டறியப்பட்டு, சிகிச்சைக்காக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கபட்டு வந்தநிலையில் உயிரிழந்த முதியவரின் மனைவி இன்று உயிரிழந்துள்ளார்.
இதேவேளை அரசடி கிராமசேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டு, அங்கு தொடர்ந்து அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர்.பரிசோதனையில் இதுவரை 8 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதி
மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு நடமாடும் வாக்களி
மன்னார் க
திடீர் உடல் நலக்குறைவு காரணமாக யாழ். போதனா வைத்தியசால
தலவாக்கலை பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகி நபர்
முல்லைத்தீவு- முள்ளியவளை பகுதியில் அமைந்துள்ள தேசிய ப
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண
நாடாளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமைய
வெலிகம பல்பொருள் அங்காடியில் வரிசையை தவிர்த்த ரஷ்ய பி
திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலக பிரிவ
கொழும்பு மாவட்டத்தில் பல இடங்களை அதியுயர் பாதுகாப்பு
நாட்டில் மேலும் சிலப்பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள
அரச வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தும் அமைச்சுக்கள
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்
கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் காவல்துறையினரின
