More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ அதுவே நடந்திருக்கின்றது- டக்ளஸ் !
எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ அதுவே நடந்திருக்கின்றது- டக்ளஸ் !
Jan 22
எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ அதுவே நடந்திருக்கின்றது- டக்ளஸ் !

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்தொழில் ஈடுபட்டிந்தபோது எற்பட்ட துன்பகரமான சம்பவத்தில் சிக்கி, நான்கு இந்தியக் கடற்றொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், நால்வரது சடலங்களும் கிடைத்துள்ளன என்ற செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்துகின்றது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 



இவ்வாறான இழப்புக்கள் பலவற்றை கடந்த வந்த அனுபவத்தின் அடிப்படையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரதும் உறவினர்களினதும் உணர்வுகளைப் புரிந்து கொள்கின்றேன். அவர்கள் சூழ்ந்திருக்கும் துன்பக் கடலில் இருந்து அவர்கள் மீண்டு வரவேண்டும் என்பதே என்னுடைய எதிர்பார்ப்பாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



இவ்விடயம் தொடர்பாக டக்ளஸ் தேவானந்தா மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையின் கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டதில் இருந்து, இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத செயற்பாடுகள் நிறுத்ததப்பட்டு, இலங்கை கடற்றொழிலாளர்களும், எமது உறவுகளான இந்தியக் கடற்றொழிலாளர்களும் பாதிக்கப்படாத வகையில் இரண்டு தரப்பினரும் இணங்கிக் கொள்ளும் வகையிலான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதை வலியுத்தி வந்தேன்.



மேலும் அதுதொடர்பான முன்வரைவு ஒன்றை தயாரித்திருந்தேன். கடந்த வருடம் ஜனவரி மாதம்,  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டபோது இந்தியப் பிரதமரிடமும் கையளித்திருந்தேன்.



இந்தியத் தரப்பினரும் குறித்த திட்டத்தினை வரவேற்றிருந்தனர். எனினும் துரதிஸ்டவசமாக ஏற்பட்ட கொவிட் – 19 காரணமாக அதனை முன்கொண்டு செல்ல முடியவில்லை.



அண்மைக்காலமாக இந்தியக் கடற்றொழிலார்களின் எல்லை தாண்டிய செயற்பாடுகள் அதிகரித்திருந்த நிலையில், குறித்த செயற்பாடுகள் தொடரும் பட்சத்தில் இலங்கை – இந்தியக் கடற்றொழிலாளர்களுக்கு இடையில் கடலில் மோதல் ஏற்பட்டு, விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்பட்டு விடும் என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தேன். எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ, துரதிஸ்டவசமாக அது இப்போது நடந்திருக்கின்றது.



உயிரிழந்தவர்கள் இந்தியக் கடற்றொழிலாளர்களாக இருப்பினும், அவர்களும் என்னுடைய தொப்புள் கொடி உறவுகள். கடந்த காலங்களில் நாம் துன்பத்தினை சுமந்த வேளைகளில் எல்லாம் எமக்காக உரிமையுடன் குரல் கொடுத்தவர்கள். எமக்காக துடிப்பதற்கு பாரத தேசம் இருக்கின்றது என்ற நம்பிக்கையை எமக்கும் இன்றும் ஏற்படுத்திக் கொண்டிருப்பவர்கள்.



அவ்வாறானவர்களுக்கு இன்னல் ஏற்படுவதை என்னால் எவ்வாறான சூழலிலும் தாங்கிக் கொள்ள முடியாது. நடைபெற்ற சம்பவம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.



எனினும், இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நடப்பதை தடுக்கும் நோக்கில் உண்மையில் நடந்தது என்ன என்பதை அறிந்து கொள்ளுவதற்கு தேவையான நடவடிக்கைகளை பொறுப்புள்ள அமைச்சர் என்ற வகையில் மேற்கொண்டுள்ளேன்.



அதேவேளை, உணர்ச்சிவசப்பட்ட முடிவுகள் எந்தளவிற்கு இழப்புக்களையும் அழிவுகளையும் ஏற்படுத்தும் என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்து கொண்டவன் என்ற அடிப்படையில், இந்தியக் கடற்றொழிலாளர்களும் இச்சந்தர்ப்பத்தில் உணர்ச்சி வசப்படாது புத்திசாதுரியமாக எதிர்கால நடவடிக்கைகளை திட்டமிட வேண்டும் என்பதே என்னுடைய எதிர்பார்ப்பாகும்



எவ்வாறிருப்பினும், இவ்வாறான சம்பவங்கள் முழுமையாக தடுக்கப்பட வேண்டுமாயின் இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய கடற்றொழில் செயற்பாடுகள் தொடர்பான பிரச்சினை நிரந்தமாக தீர்க்கப்பட வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul24

தமிழர்களுக்கான அரசியல் தீர்வைப் பொறுத்தவரை, மாகாணசபை

Aug19

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண

Feb03

மாலைத்தீவில் இலங்கையர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிர

Sep26

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண

Apr02

கடும் உஷ்ண நிலைமையை எதிர்கொள்ளும் வகையில் சுகாதார நடவ

Jan29

2022 ஆம் ஆண்டில் சுமார் 690 கோடி அமெரிக்க டொலர்களை வெளிநாட்

May03

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச சொத்துக்களில் பெ

May25

கோட்டபாய ராஜபக்ச அரசாங்கத்தினால் கடந்த ஆண்டு நாடாளு

Mar10

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் ரோஹித ராஜபக

May02

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் மக்களை

Apr28

இலங்கையில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.02 லட்சம் எ

Mar17

நேற்றைய தினம் (16) கொழும்பு நகரம் உட்பட இலங்கையின் ஏழு மு

Feb07

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின்

Dec17

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தொடர்ந்தும் இலங்கைக்குத

Sep21

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (00:51 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (00:51 am )
Testing centres