சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஷாண்டோங் மாகாணத்தில் யான்டாய் நகரில் தங்கச் சுரங்கம் ஒன்று உள்ளது. இங்கு கடந்த 10-ந்தேதி தொழிலாளர்கள் வழக்கம்போல் தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது சுரங்கத்தில் பயங்கர வெடிப்பு நேரிட்டது.
இதில் சுரங்கத்தின் நுழை வாயில் பகுதி இடிந்து இதனால் சுரங்கத்துக்குள் இருந்த தொழிலாளர்கள் 22 பேர் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர். எனினும் சுரங்க நிர்வாகம் விபத்து நடந்த 30 மணி நேரத்துக்குப் பிறகு போலீஸ் மற்றும் மீட்புக் குழுவுக்கு தகவல் தெரிவித்தது.
மீட்பு பணிகள் தாமதமாக தொடங்கியதால் மீட்புக்குழுவினர் சுரங்கத்துக்குள் சிக்கி இருக்கும் தொழிலாளர்களை நெருங்குவதில் சிக்கல் எழுந்தது. இதனால் 6 நாட்கள் ஆகியும் தொழிலாளர்களின் நிலை என்ன என்பது தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் விபத்து நடந்த 7 நாட்களுக்குப் பிறகு சுரங்கத்துக்குள் தொழிலாளர்கள் 12 பேர் உயிருடன் இருப்பது நேற்று தெரியவந்தது. சுரங்கத்தில் உள்ள ஒரு சிறிய துளை வழியாக தொழிலாளர்கள் தாங்கள் உயிருடன் இருப்பதை மீட்பு குழுவுக்கு தெரியப்படுத்தினர்.
இது மீட்புக் குழுவிற்கு நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளித்துள்ளது. இதையடுத்து நூற்றுக்கணக்கான மீட்புக்குழுவினர், தொழிலாளர்கள் 12 பேரையும் பத்திரமாக மீட்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். அதேசமயம் மற்ற தொழிலாளர்கள் 10 பேரின் கதி என்ன என்பது இன்னமும் தெரியவில்லை.
ரஷ்யாவுக்கு எதிரான போரில் 1,300 உக்ரைன் வீரர்கள் உயிரிழந
உக்ரைனில் நடந்த சண்டையின் போது பிரான்ஸ் நாட்டவர் ஒருவ
நைஜீரியாவைச் சோ்ந்த பயங்கரவாத அமைப்பான போகா ஹராமின்
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவ
லண்டனில் இப்போது கோடைகாலம் என்பதால், மக்கள் நீச்சல் க
ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்
கருங்கடலில் உள்ள ரஷிய போர்க்கப்பலை உக்ரைன் அழித்ததைய
இந்தோனேசியாவில் இராட்சத அலையில் சிக்கிய 11 பேர் உயிரிழ
இங்கிலாந்தில் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் கொரோனா வைரஸ் ம
ஜனவரி 8ம் தேதி முதல் சர்வதேச பயணிகளுக்கான தனிமைப்பட
வடக்கு துருக்கியின் பார்டின் மாகாணத்தில் நிலக்கரிச்
ரஷ்யாவுக்கு உதவுவதற்காக ஆயுதங்கள் ஏந்திய சீன இராணுவ வ
நியூயார்க் மாகாண கவர்னர் ஆண்ட்ரூ கியூமோ தன்னிடம் தகாத
ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் அமெர
