More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • பேலியகொட C City சந்தை வளாகத்தின் கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!
பேலியகொட C City சந்தை வளாகத்தின் கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!
Jan 19
பேலியகொட C City சந்தை வளாகத்தின் கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

இலங்கை அரச பொறியியலாளர்கள் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பேலியகொட C City சந்தை வளாகத்தின் கட்டுமானப் பணிகள் துறை சார்ந்த அமைச்சர் மற்றும் பிரதமரின் ஆலோசனையின் பேரில் நேற்று (திங்கட்கிழமை) மீண்டும் ஆரம்பமாகியது.



சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்திற்கு அமைவாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதானி யோஷித ராஜபக்ஷவின் பூரண மேற்பார்வையின் கீழ் இந்த சந்தை வளாகத்தின் கட்டுமான பணிகள் இடம்பெறுகின்றன.



கிராமிய வீடமைப்பு பிராந்திய உறவுகள் நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்தவின் வழிப்படுத்தலுக்கு அமைய அந்த அமைச்சின் கீழ் செயற்படும் இலங்கை அரச பொறியியலாளர் கூட்டுத்தாபனம் இதன் கட்டுமான பணிகளை முன்னெடுக்கின்றது.



பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக சேவையாற்றிய காலப்பகுதியில் 14 ஏக்கர் நிலப்பரப்பில் இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.



எனினும் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின்போது இவ்வேலைத்திட்டத்தின் பணிகள் முழுமையாக கைவிடப்பட்டன.



இச்சந்தை வளாகம் நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர் நுகர்வோருக்கு கட்டுமானத் துறையின் அனைத்து மூலப்பொருட்கள், பொருட்கள் மற்றும் சேவைகளை ஒரே இடத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.



இதேவேளை, சந்தை வளாகத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளம் CCity.lk நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இங்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட பல கடைகளும் நேற்று உத்தியோகபூர்வமாக கடை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.



கொடுப்பனவுகள் தாமதிக்கப்பட்டிருந்த காரணத்தினால் தேசிய இயந்திர நிறுவனத்தில் சேவையிலிருந்து விலகியிருந்த 50 ஊழியர்களுக்கு ரூ.233 இலட்சம் மதிப்பிலான உபகாரத்தொகை வழங்கப்பட்டது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May01

இரத்து செய்யப்பட்ட பல ரயில் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்

Oct05

வழமையான செயற்பாட்டிற்கு அமைய இன்று முதல் எரிபொருள் மு

Sep20

இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் மனித உரிமை மீறல்களில் ஈடுà®

Oct10

ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சட்டமூலம் தற்போது சட்டமா அதிபர

Oct04

பாடசாலை மாணவர்களில் மேலும் ஒரு மில்லியன் பேருக்கு பாட

Feb03

நாட்டில் புற்றுநோயால் நாளாந்தம் சுமார் 40 பேர் உயிரிழபà

Jun12

 மன்னிப்பு கோரினார் மின்சார சபை தலைவர்

மன்னார் க

Mar16

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்

Jul03

கொரோனாத் தொற்றுப் பரவல் சவாலை ஒன்றிணைந்து வெற்றிகரமாà

Feb13

இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோதà®

Mar11

குருணாகலில் காட்டு யானையின் தாக்குதலுக்கு புதுமண தம்à

Oct25

வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை à

Mar23
Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 16 (04:52 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 16 (04:52 am )
Testing centres