வவுனியா - செட்டிகுளம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த புத்தரை காணவில்லை என அப் பகுதியில் தற்போது வசித்து வரும் தமிழர் ஒருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
வவுனியா - செட்டிகுளம், பழைய புகையிரத நிலையத்திற்கு முன்பாக நேற்று (09) புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அது நேற்று (09) மாலையே அகற்றப்பட்டிருந்ததுடன் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் வைத்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்றைய தினம் (10) குறித்த நபர் தானே தனது காணியில் புத்தர் சிலையை வைத்ததாகவும், அதனை காணவில்லை எனவும் செட்டிகுளம் பொலிஸில் முறையிட்டுள்ளார்.
குறித்த நபர் கடந்த 2022ஆம் ஆண்டு காலப்பகுதியில் நோர்வேயில் இருந்து இலங்கைக்கு வருகை தந்து நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மையின பெண் ஒருவரை திருமணம் செய்திருந்ததுடன், கடந்த பெப்ரவரி மாதமளவில் செட்டிகுளத்திற்கு வந்து தங்கியுள்ளார்.
இந்நிலையிலேயே குறித்த புத்தர் சிலையை அவர் தனது காணிக்கு முன்னால் உள்ள அரச காணியில் வைத்துள்ளார்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இன்று காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் ஒரு பிரதேசம் தன
கலைஞர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் மருத்துவ உதவி விப
நாளைய தினமும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் எ
அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளில் 2022ஆ
பாதுகாப்பு அதிகாரிகள் இருவரை தாக்கிய குற்றச்சாட்டின
கொரோனா தொற்றாளர்களாக மேலும் 348 பேர் சற்று முன்னர் அடைய
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொ
மன்னார் மாவட்டத்திலும் சுகாதார துறையினருக்கும் கொவி
வீதியில் இறங்கி போராடிய முல்லைத்தீவு மீனவர்கள் தாக்க
ஹங்வெல்ல பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் சற்று முன்
கோவிட் தொற்றின் டெல்டா மாறுபாடு கொழும்பு நகராட்சி மன்
யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்
இலங்கையின் தேயிலை இதுவரை இல்லாத வகையில் கடந்த மாதம் அ
பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினால் இலங்கை மக்களி
நாடளாவிய ரீதியில் இன்று (20) செவ்வாய்க்கிழமை ஒரு மணித்த
