எல்பிட்டிய, எத்கந்துர பிரதேசத்தில் நேற்று (07) பிற்பகல் விவசாய நிலம் ஒன்றில் பாதியளவில் புதைக்கப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் ஒன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எல்பிட்டிய எத்கந்துர பிரதேசத்தில் வசிக்கும் சந்த குமார சரத்குமார என்ற 21 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறித்த இளைஞன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவர் வீடு திரும்பாததால், அவரை காணவில்லை என உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.
குறித்த இளைஞனின் நெருங்கிய நண்பன் என கூறப்படும் 40 வயதுடைய நபரின் வீட்டில் இருந்து குறித்த இளைஞனின் மோட்டார் சைக்கிளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இளைஞனின் உடல் புதைக்கப்பட்ட குழிக்கு அருகில் அவரது பணப்பையையும் பொலிசார் கண்டுபிடித்தனர்.
உயிரிழந்த இளைஞனின் நெருங்கிய நண்பரே இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என சந்தேகிக்கின்ற பொலிஸார், அவர் தற்போது தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டில் நேற்று மேலும் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளா
எந்த சூழ்நிலையிலும் கூட, நாட்டரிசி 1 கிலோ 100 ரூபாவுக்கு
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக அனைத்து விடயங்களும் கண்டறி
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித
Aflatoxin அடங்கியுள்ள திரிபோஷா அழிக்கப்பட்டுள்ளதனால்,
கொரோனா தொற்றை தடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் முக்க
மொத்த சனத்தொகை அடிப்படையில் உலகில் அதிகளவில் கொவிட் த
யாழ்ப்பாணம்- மீசாலை பகுதியில் மேய்ச்சலுக்கு மாட்டை கொ
நாட்டில் அந்நிய செலாவணி குறைவடைதல், டொலர்களுக்கான தட
மிரிஹான பொலிஸ் நிலையத்தில் நான்கு ஊடகவியலாளர்கள், ஒரு
எதிர்வரும் நாட்களில் மதுபானம் மற்றும் சிகரட்டின் வில
இலங்கையர்களின் இன்றைய நிலையில் உள்ளங்களில் பற்றி எரி
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள குருதி சுத்த
கிளிநொச்சி வட்டக்கட்சி மாயனூர் காட்டுப் பகுதியில் பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொட
