கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்தியர் போல் நடித்து பல்வேறு நபர்களை ஏமாற்றி பணம் வசூலித்த நபரை பொரளை பொலிஸார் நேற்று (05) கைது செய்துள்ளனர்.
இந்த சந்தேக நபர் தொடர்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் உட்பட மேலும் இருவர் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் உள்ள ஆப்பிள் தோட்டத்தில் வேலைக்கு அனுப்புவதாக கூறி வைத்தியர் போல் நடித்து 65,000 ரூபா பணத்தை மோசடி செய்ததாக மருதானையை சேர்ந்த நபர் ஒருவர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
அவ்வாறே குருநாகல் பகுதியைச் சேர்ந்த ஒருவரை அவுஸ்திரேலியாவில் உள்ள ஆப்பிள் தோட்டத்தில் வேலைக்கு அனுப்புவதாகக் கூறி 50,000 ரூபா பணம் கேட்டுள்ளனர்.
சந்தேகநபர் தனக்கு இரண்டு ஆப்பிள் தோட்டங்கள் இருப்பதாகவும், இருவருக்கு அங்கு தொழில் செய்ய வாய்ப்பு தருவதாக கூறி இந்த இருவரிடமும் மோசடியாக பணம் பெற்றுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் நேற்று (05) கைதுசெய்யப்பட்டதுடன் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தாம் போலி வைத்தியர் என ஒப்புக்கொண்டார்.
மேலும் முறைப்பாட்டாளர்களிடம் தீர்வு காண விருப்பம் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சந்தேக நபரால் பாதிக்கப்பட்ட ஏனைய நபர்களிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக் கொள்வனவில் அரசு பாரி
எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு அரச மற்ற
தீபாவளி தினத்தன்று தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய
யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் விமானப் படைச் சிப்பாய் ஒ
ரஷ்யா மற்றும் உக்ரைன் மோதலால் சுற்றுலாத்துறை பாதிக்க
எமது தாய்நாட்டின் இருப்பு மற்றும் அழகிற்காக சமுத்திர
வவுனியா - செட்டிகுளம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த புத
ஏழு ஆண்களை தகாத முறையில் துன்புறுத்திய வலப்பனை பிரதேச
தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் யார் ஜனாதிபதியாக இரு
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் மட்டக்களப்ப
பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கும் ஐக்கிய தேசியக் கட்சிய
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிர தேசத்தின் பனிச
தடுப்பூசி பெற்றுக்கொண்ட கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை
இனப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் தேசிய பேரவையில் த
