வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியின் நுகயாய பகுதியில் நேற்றிரவு இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கெப் ரக வாகனமொன்றும், முச்சக்கரவண்டியொன்றும் மோதுண்டே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த 44 வயதான பொலிஸ் கான்ஸ்டபிள், 42 வயதான அவரின் மனைவி மற்றும் 70 வயதான தந்தை ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த சிறுவனொருவன் மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கெப் வாகனத்தின் சாரதி மது போதையில் வாகனத்தை செலுத்தியுள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதுடன், கெப் சாரதியிடம் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை எனவும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
விபத்து தொடர்பில் கெப் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
நாட்டில் இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை பல்வேற
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும்இ இந்தியப் பிரத
அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் வெளிவிவகார அமைச்சர
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான போட்டித்தன்மை
மேல் மாகாணத்தில் 11ஆம் வகுப்பு மாணவர்களின் நலன் கருதி ச
இந்தியாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் க
கல்வி பொதுத் தராதர உயர் தரப்பரீட்சை, இன்றைய தினம் முதல
கம்பஹா மற்றும் களுத்துறை மாட்டவங்களில் பாடசாலைகள் மீ
பாணந்துறையில் உள்ள விகாரைக்கு அருகாமையிலுள்ள கற்பாற
யாழ். நல்லூர் பிரதேசத்தில் அமைந்திருக்கும் பத்திக் மற
கிளிநொச்சி கரடி போக்கு சந்தியை அண்மித்த பகுதியில் புத
தபால் திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிக்க புதிய திட்
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்ப
ஒமிக்ரோன் எனப்படும் புதிய கோவிட் மாறுபாடு சிறுவர்கள்
ஹஜ் பெருநாளை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது வ