கிளிநொச்சியில் நேற்று (02) பிற்பகல் ஏற்பட்ட மினி சூறாவளி காரணமாக மாவட்டத்தில் 91 குடுப்பங்களைச் சேர்ந்த 301 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று மதியம் 12 மணிக்கு பெறப்பட்ட அறிக்கையின் பிரகாரம் கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுகளிலே குறித்த அனர்த்த பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன.
இதன்படி கிளிநொச்சியில் ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 82 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
மேலும் கிளிநொச்சி மகாவித்தியாலய வளாகத்தில் காணப்பட்ட மரங்கள் முறிந்து சரிந்துள்ளதுடன், பாடசாலை தற்காலிக கொட்டகைகளும் காற்றினால் தூக்கி வீசப்பட்டுள்ளன.
குறித்த பாடசாலைக்கு முன்னால் இருந்த முதிர்ச்சியடைந்த மரம் ஒன்றின் கிளை முறிந்து வீதியில் விழுந்துள்ளது.
கிளிநொச்சி நகர் மற்றும் பெரிய பரந்தன் பகுதியில் அமைந்துள்ள நெல் களஞ்சிய சாலைகள் சேதமடைந்துள்ளன. கடைத்தொகுதி ஒன்றின் கூரைத்தகடுகள் தூக்கி வீசப்பட்டுள்ளன. கண்டாவளை பகுதியில் வாழைத் தோட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
குறித்த அனர்த்த பாதிப்புக்களின் மதிப்பீடுகள் தேசிய அனர்த்த சேவைகள் மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
வல்வெட்டித்துறையில் இன்று மேலும் 40 பேருக்கு தொற்று உளà
மன்னாரில் முதலாவது கொரோனா தொற்றாளரின் மரணம் இன்று பதி
நாட்டில் அவசர காலச் சட்டம் மற்றும் ஊரடங்குச் சட்டம் நà®
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஊடாக தமக்கு வழà®
எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலால் உருவா
விடுதலைபுலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களால் தà®
மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் அணுகுமுறை மாறும் à
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டு அரசில் ஸ்ர
வவுனியா மாகாண பொது வைத்தியசாலையினை போதனா வைத்தியசாலைà
எதிர்காலத்தில் பகிடிவதைக்கு எதிராக கடுமையான தீர்மானà®
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருநà¯
கோட்டபாய ராஜபக்ச அரசாங்கத்தினால் கடந்த ஆண்டு நாடாளுà
புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைக்கப்படà
“உங்களை சுட வந்ததாக தெரிவித்து பயங்கரவாத தடைச்சட்டத
