More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இளம் பிக்குகள் துஷ்பிரயோகம் தொடர்பான புதிய செய்தி
இளம் பிக்குகள் துஷ்பிரயோகம் தொடர்பான புதிய செய்தி
Mar 31
இளம் பிக்குகள் துஷ்பிரயோகம் தொடர்பான புதிய செய்தி

இளம் பிக்குகள் மீதான  பாலியல்  துஸ்பிரயோகம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு  பல நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்ட பிரதம  பௌத்த மதகுரு  தொடர்பான  வழக்கு எதிர்வரும்  ஜுன் மாதம் 22 ஆம்  திகதி வரை மறு விசாரணைக்காக ஒத்தி  வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.



அம்பாறை மாவட்டம்  கல்முனை தலைமையக   பொலிஸ் பிரிவிற்குட்பட்ட   விஹாரை ஒன்றில்   வைத்து 3 இளம் பிக்குகள்  பாலியல் துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பிலான வழக்கு   புதன்கிழமை (29)கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில்   எடுத்து கொள்ளப்பட்ட நிலையில்  விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு   எதிர்வரும்  ஜுன் மாதம் 22 ஆம்   திகதி வரை  மறுவிசாரணைக்காக குறித்த வழக்கினை  கல்முனை  நீதிமன்ற நீதிவான்  உத்தரவிட்டார். 



அம்பாறை மாவட்டம் சடயந்தலாவை பகுதி ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 இளம் பிக்குகள்  கல்முனை பகுதி    விஹாரை ஒன்றில்    பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் ஒன்றின் அடிப்படையில் 2022 செப்டம்பர் 13 ஆந் திகதி  கல்முனை சுபத்ரா ராமய   விகாராதிபதியாக  ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் என்றழைக்கப்படும் பிரதான பௌத்த மதகுரு அம்பாறை மாவட்ட சிறுவர் பெண்கள் விசேட பிரிவினரால் சந்தேகத்தின் அடிப்படையில்  கைது செய்யப்பட்டு கல்முனை  நீதிமன்ற நீதிவான் முன்னிலையில்   ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.



இதனடிப்படையில் கல்முனை  நீதிமன்ற நீதிவான்  கைதான  சந்தேக நபரான பௌத்த மதகுரு  தொடர்புபட்ட  3 வழக்குகளில்  தலா 3 பேர் வீதம்,  9 பேர் கொண்ட  5 இலட்சம் பெறுமதியான  சரீரப்பிணையில் செல்ல வேண்டும்,    ஒவ்வொரு மாத இறுதியில்   மீண்டும் அருகில் உள்ள கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு சென்று கையொப்பம் இடுதல், குறித்த வழக்கின் சாட்சிகள்  குடும்பத்தினரை   அச்சுறுத்துதல், வழக்கு தொடர்பிலான தலையீடு செய்யாதிருத்தல் வேண்டும், வெளிநாடு செல்வதற்கு தடை, அதாவது கடவுச்சீட்டினை மன்றிற்கு ஒப்படைத்தல் வேண்டும்,  அவ்வாறு தன்னிடம் கடவுச்சீட்டு  இல்லை எனின்    உரிய தரப்பினரின் உறுதிப்படுத்தி மன்றிற்கு தெரிவிக்க வேண்டும், கிராம சேவகரின் நலச்சான்றிதழ் சமரப்பிக்க வேண்டும், என்ற கடும் நிபந்தனையுடன் குறித்த  பௌத்த மதகுரு  பிணையில் விடுவித்து  உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



இந்நிலையில்   இவ்வழக்கு  மீண்டும்   எதிர்வரும்  ஜுன் மாதம் 22 ஆம்    திகதி வரை வழக்கினை  நீதிவான் ஒத்தி வைக்க  உத்தரவிட்டார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr30

குறைந்த விலையில் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்காக நிறà

Oct10

அதிகாரங்களை மீறும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இலங்à®

Jan21

கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுகாதார பாதுகாப்பு நிலà

Jun10

இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதிக்குப் போத

Sep21

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரà

Mar07

இலங்கையில் மிகவும் பிரபல்யம் வாய்ந்த யானை ஒன்று தனது 69

Feb09

சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்லவுடன் இடம்பெற்ற à

Oct17

யாழ்.குடாநாட்டில் 1இ614.11 ஏக்கர் நிலத்தை உயர் பாதுகாப்பு à

Feb27

கொவிட்-19 சுகாதார வழிகாட்டுதல்ளைப் பின்பற்றி எதிர்வருà®

Oct05

நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தேசிய பேரவையிலà

Sep23

வவுனியாவில் கொரோனா தொற்றினால் இதுவரை உயிரிழந்தவர்களà®

Oct02

இலங்கை தொடர்பான புதிய பிரேரணை குறித்துக் வடக்கு, கிழகà¯

Jun05

வடமாகாண மக்களுக்கு வழங்கப்பட்ட 50,000 சினோபோம் கோவிட் -19 தà®

Jun12

  நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் உள்ள 43,000 மெட்ரிக் டன

Dec29

அரசமைப்பு பேரவையூடாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினà®

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (10:56 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (10:56 am )
Testing centres