More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • IMF நிதி கிடைத்தது! ஜனாதிபதியின் விசேட அறிக்கை
IMF நிதி கிடைத்தது! ஜனாதிபதியின் விசேட அறிக்கை
Mar 22
IMF நிதி கிடைத்தது! ஜனாதிபதியின் விசேட அறிக்கை

சர்வதேச நாணய நிதியத்துடனான கடன் வசதி தொடர்பில் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றில் இன்று விசேட உரையொன்றை நிகழ்த்தினார்.



ஜனாதிபதி தனது உரையில், 



சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதியைப் பெறுவது இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் நாட்டை மேம்படுத்துவதற்குமான ஒரு படியாகும். கடன் வசதிகளின் 4 ஆண்டுகளில் மொத்தமாக சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறப்படவுள்ளதுடன், முதல் தவணையாக 333 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.



மேலும், ஏனைய நாடுகள் மற்றும் ஏனைய கடன்கொடுநர்களிடமிருந்து விரைவான கடன் ஆதரவில் சுமார் 7 பில்லியன் அமெரிக்க டொலர்களை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.



சிலர் இந்த கடன் வசதியை இன்னொரு கடனாகவே கருதுவதாகவும், மேலும் சிலர் நாட்டின் மொத்த கடனை பெற்ற தொகையை கொண்டு செலுத்த முடியாது எனவும் கூறுகின்றனர்.



இந்த அறிக்கைகள் அறியாமை அல்லது அரசியல் இலாபத்துக்காக நாட்டைக் காட்டிக்கொடுக்கும் விருப்பத்தை காட்டுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.



இந்த கடன் வசதி இலங்கையின் சர்வதேச அங்கீகாரத்தை மீட்டெடுக்கும், நாடு வங்குரோத்தாகாமல் இருப்பதை உறுதிசெய்து, உள்நாட்டு வங்கிகள் சர்வதேச அங்கீகாரத்தை மீண்டும் பெற உதவும்.



இது குறைந்த வட்டியில் கடனுக்கான வாய்ப்புகளை உருவாக்கும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் மற்றும் வலுவான புதிய பொருளாதாரத்திற்கான அடித்தளத்தை அமைக்கும்.



பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும், சகலவிதமான அழுத்தங்களையும் தாங்கிக்கொண்டும், சம பலத்துடன் துன்பங்களை அனுபவித்தும் இந்நாட்டு மக்கள் அமைதியாகவும் பொறுமையுடனும் இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். கடன் வசதியை அடைவதில் அவர்களின் அர்ப்பணிப்பு பெரும் பலமாக இருந்தது. எனவே, இந்நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி தனது நன்றியை தெரிவித்தார்.



நாங்கள் இப்போது ஒரு புதிய பயணத்தைத் தொடங்குகிறோம். செயல்முறை முழுவதும் நாம் பல பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.



நமது வெற்றிக்கான அடித்தளம் இந்தப் பாதையில்தான் இருக்கும். இவற்றில் சில சீர்திருத்தங்கள் ஏற்கனவே 2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால பாதீட்டுத் திட்டம் மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டம் மூலம் முன்மொழியப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பல சீர்திருத்தங்களை நாங்கள் அறிமுகப்படுத்தவுள்ளோம்.



2025 ஆம் ஆண்டளவில் முதன்மைப் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3% ஆகக் குறைக்கவும், 2026 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14% வருவாயை அதிகரிக்கவும் அரசாங்கம் இலக்காக நிர்ணயித்துள்ளது.



நிலையான வருமான வரி வீதம் 30% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் துறை சார்ந்த வரி விலக்கு நீக்கப்பட்டுள்ளன. உழைக்கும்போது செலுத்தும் வரி வீதம் 12% இல் இருந்து 15% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் வரி விலக்கு வரம்பு 300 மில்லியன் ரூபாவிலிருந்து 80 மில்லியன் ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar27

மயானமொன்றில் உயிரிழந்தவரின் இறுதிச்சடங்குகள் நடைபெற

Sep07

ஜெனிவா கூட்டத்தொடருக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை எ

May03

விக்ரம் படத்தின் ட்ரைலர் அறிவிப்பு

உலகநாயகன் கமலà

Feb19

இலங்கையில் டெங்கு வைரஸிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதà®

Apr11

நாட்டில் தற்போதுள்ள அரசியல் அமைப்பில் மாற்றத்தை ஏற்பà

Jan15

இலங்கை மின்சார சபைக்கு 1500 மெற்றிக் தொன் எரிபொருளை வழங்à

Jun12

மீண்டும் திரிபோஷா உற்பத்தி 

இலங்கையில் திரிபோஷà®

Oct20

குத்தகை தவணையை செலுத்த அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை à

May29

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பற்றி எரிந்ததையடுத்து கà

Apr22

யாழ்ப்பாண நகரப் பகுதியில் அண்மையில் அதிகளவானோர் கொரோà

Mar16

பாராளுமன்றத்தில் ஓரினச்சேர்க்கையாளர்களுடன் உடலுறவு

Jun20

புனரமைப்பில் உள்ளடக்கப்படாத மிகுதி வீதியைப் புனரமைதà¯

May13

இலங்கையில் நேற்று ஏற்பட்ட அரசியல் மாற்றத்துடன் ரூபாவà

Jun17

அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைவாகவும், ஐக்கிய

Apr12

வலி. தென் மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட ஒரு இலட்சம் கிலோ

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (09:48 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (09:48 am )
Testing centres