கண்டி, அலவத்துகொட பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட தனுகா மதுவந்தி என்ற 26 வயதுடைய யுவதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கடந்த 10ம் திகதி இரவு 9.30 மணியளவில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில், அங்கவீனமுற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் கொலையைச் செய்தாரா என்பதை உறுதிப்படுத்த அவரது DNA மாதிரிகள் மற்றும் இறந்த பெண்ணின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட DNA மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இராணுவ சிப்பாயின் விரல் நகங்கள் மற்றும் சாரத்தில் சேறு படிந்திருந்த நிலையில் அவர் மீதான சந்தேகம் வலுப்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், சந்தேகநபரான இராணுவ சிப்பாய் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
சந்தேகநபர் கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவசரம
மக்களின் நலன்களை அடிப்படையாக கொண்டே வரிக் கொள்கைகளை ம
இலங்கையில் மீண்டும் சமையல் எரிவாயுக்கு தட்டுப்பாடு ஏ
சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் சற்றுமு
நான் அச்சப்பட மாட்டேன், மரணிக்கவும் பயமில்லை, முடிந்த
இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம காவல்துறை பிரிவுக்குட
பின்வத்தை வடுபாசல் தோட்டத்தில் வசிக்கும் 16 வயதுடைய சி
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் குருநாகல் மாவட்ட நாடாளு
13வது போர் வெற்றியாண்டு நிகழ்வு அரச தலைவர் கோட்டாபய ராஜ
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சுன்னாகம
இலங்கையில் கையிருப்பில் உள்ள பைசர் தடுப்பூசிகள் எதிர
புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய் விவகார
சுயாதீன மனித உரிமை தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழ
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை மத்திய வங
நாட்டில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக