நேற்றைய தினம் (16) கொழும்பு நகரம் உட்பட இலங்கையின் ஏழு முக்கிய நகரங்களில் காற்று மாசுபாடு மக்களை பாதிக்கும் வகையில் அதிகரித்துள்ளது என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் காற்று தர சுட்டெண் (US AQI) படி,
கொழும்பை சுற்றியுள்ள வளிமண்டலத்தில் உள்ள நுண் துகள்களின் அளவு (PM 2.5) நேற்று காலை 9.00 மணியளவில் 142 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று காலை காற்று மாசுபாடு காரணமாக கொழும்பு நகரை சுற்றியுள்ள வளிமண்டலத்தில் இருள் சூழ்ந்து கடும் வெப்பம் நிலவியது.
இது தவிர யாழ்ப்பாணம், குருநாகல், கண்டி, கேகாலை, புத்தளம் மற்றும் பதுளை ஆகிய நகரங்களின் வளிமண்டலத்தில் நுண் துகள்களின் அளவு (PM 2.5) அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஆசிரி கருணாவர்தன தெரிவித்துள்ளார். .
மேலும், யாழ்ப்பாணம் - 120, குருநாகல் - 117, கண்டி - 103, கேகாலை - 106, புத்தளம் - 129, பதுளை - 109 என காற்றுமாசுபாடு பதிவாகி உள்ளது.
வளிமண்டலத்தில் நுண்ணிய துகள்களின் அளவு அதிகரிப்பதால், முதியோர்கள், குழந்தைகள் உட்பட நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு இது மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கூறுகிறது.
சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடுவதற்கு மக்கள் அ
அஸ்ட்ராசெனெகா இரண்டாம் தடுப்பூசி இன்றைய தினம் கொழும்
சுகாதார அமைச்சின் வளாகத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டு
நாட்டில் கொரோனா அலை வேகமாக அதிகரித்து வரும் இந்த சூழ்
2022ஆம் ஆண்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படுவதனை தவிர்க்க
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களை கலைக
இலங்கையில் கொரோனா மரணங்களின் அதிகரிப்பு வேகமானது சதவ
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள
தோட்ட நிர்வாகம் மற்றும் கம்பனிகளுக்கு எதிராகவும், தொழ
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சுன்னாகம
விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய இராணுவ
20 வீதமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கல்வித்தகைமைய
தெற்காசியாவைச் சேர்ந்த ஒருவர் பிரித்தானியாவை வழிநடத
கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண்
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து வெளிநா
