உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான நிதிக் கோரிக்கை கடிதம், நிதி அமைச்சரான ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டதாக நிதி அமைச்சின் செயலாளர், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.
முன்னதாக நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு நிதி வழங்குவதற்கு நிதி செயலாளரின் அனுமதியே போதுமானது என நிதிச் செயலாளர் தமக்கு அறிவித்திருந்தாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், தேவையான நிதி, உரிய காலத்தில் வழங்கப்படும் என நம்புவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி தேர்தல் 2023க்காக 2023 வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட எந்தவொரு நிதியையும் தடுத்து நிறுத்துவதைத் தடுக்கும் வகையில் இலங்கையின் உயர் நீதிமன்றம் மார்ச் 3 ஆம் திகதி நாட்டின் நிதிச் செயலாளர் மற்றும் நிதி அமைச்சரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டமா அதிபர் ஆகியோருக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்த நிலையிலேயே தற்போதைய கடிதப்பரிமாறல்கள் இடம்பெறுகின்றன.
ஏற்கனவே 203, மார்ச் 9 இல் திட்டமிடப்பட்ட உள்ளூராட்சித் தேர்தல் நிதிப் பற்றாக்குறையால், ஏப்ரல் 25 மாற்றப்பட்டுள்ளது.
குருணாகல், நாரம்மல பொது நூலகத்துடன் கூடிய பிரதேச சபை க
கடந்த 24 மணித்தியாலங்களில், தனிமைப்படுத்தல் விதிகளை மீ
யாழ்ப்பாணத்தில் உள்ளக இடம்பெயர்வுக்கு உள்ளாகி நலன்ப
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர
அம்பாறை பிராந்தியத்தில் விசேட போக்குவரத்து காவல்த்த
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15 ஆ
நுவரெலியா மாவட்டத்திலுள்ள மஸ்கெலியா சுகாதாரப் பிரிவ
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கும் ஐரோப்பி
நாராஹென்பிட்டி அபயராம விகாராதிபதி முருத்தெட்டுவே ஆன
அமைச்சர் நாமல் ராஜபக்ச, ராஜபக்ச குடும்பம் சம்பந்தமாக
கொழும்பில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொ
வவுனியா ஓமந்தை பகுதியில் வவுனியா பிரதேச ஊடகவியலாளர்க
நாட்டின் அரச சேவையில் 14 ஆயிரம் பட்டதாரிகள் இம் மாத இறு
நாளைய தினமும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் எ
ஜப்பானில் தடுப்புக் காவலில் உயிரிழந்த இலங்கைப் பெண்ண
