கொழும்பு 15 – முகத்துவாரம்இ கஜீமா தோட்டத்தில் பரவிய தீ விபத்தினால் இடம்பெயர்ந்துள்ள 300 பேருக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்படும் என கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு 8 மணியளவில் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு மாநகர தீயணைப்பு திணைக்களம் மற்றும் கடற்படையின் 10 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த தீ விபத்தினால் உயிர்ச்சேதமோ எவருக்கும் காயமோ ஏற்படவில்லை என்பதுடன் சுமார் 300 பேர் அளவில் இடம்பெயர்ந்துள்ளனர்.
இடம்பெயர்ந்தவர்கள் களனி நதீ விகாரை மற்றும் முவதொர உயன அடுக்குமாடி குடியிருப்பு சனசமூக மண்டபத்தில் தற்காலிக தங்கவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் கிராண்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் இந்த மக்களுக்கு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீடமைப்புத் தொகுதிகளில் இருந்து வீடுகளை வழங்குவதற்கான முன்மொழிவு இன்று மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் செலவுகளை மேலும
கோவிட் தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் பெண்ணொர
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று
வெல்லவாய எல்லவல நீழ்வீழ்ச்சியில் குளிப்பதற்காக செ
மத்திய வங்கியின் இரண்டாம் பிணைமுறி மோசடி வழக்கில், மு
ராஜபக்ச&n
எதிர்காலத்தில் மலேசிய வேலைவாய்ப்புக்களுக்கு மலையகத்
சிறுநீரக நோயாளர்களை பரிசோதிப்பதற்காக நவீன தொழில்நுட
எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு அத்தியா
நாட்டில் இதுவரை 2,500,428 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முத
மொத்த சனத்தொகை அடிப்படையில் உலகில் அதிகளவில் கொவிட் த
பரபல போதைப்பொருள் வியாபாரியான ஹைபிரிட் சுத்தா என்பவர
தற்போதைய நிலையில், நாளொன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு ம
தெமட்டகொட புகையிரத நிலையத்திற்குள் புகையிரதம் மோதிய
சிறுவர் தினத்தை முன்னிட்டு போரின் போது உயிரிழந்த மாணவ
