மத்திய ரஷ்யாவில் உள்ள பாடசாலை ஒன்றில் துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றும் இருபது பேர் காயமடைந்துள்ளனர் என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் மாணவர்களும் இஷெவ்ஸ்க் நகரில் உள்ள பாடசாலையில் ஒரு பாதுகாவலரும் உள்ளடங்குவதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஏறக்குறைய 1,000 மாணவர்களும் சுமார் 80 ஆசிரியர்களும் உள்ள பாடசாலை எண் 88 இல் இந்த சம்பவம் நடந்தது.
துப்பாக்கி ஏந்திய நபர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டதாகவும் அதன் நோக்கம் தெளிவாக இல்லை என்றும் கூறப்படுகிறது. அவசர அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடந்த பாடசாலைக்குள் படமாக்கப்பட்ட காணொளிகளை ரஷ்ய ஊடகங்கள் இணையத்தில் வெளியிட்டுள்ளன.
ஒரு காணொளியில் தரையில் இரத்தம் மற்றும் ஒரு ஜன்னலில் ஒரு தோட்டா துளை காட்டுவது போல் தோன்றுகிறது, சிறுவர்கள் மேசைகளுக்கு கீழே குனிந்து கிடக்கிறார்கள்.
தாஸ் செய்தி நிறுவனத்தால் மேற்கோள் காட்டப்பட்ட மாநில நாடாளுமன்ற கூற்றுப்படி, தாக்குதல் நடத்தியவர் இரண்டு கைத்துப்பாக்கிகளுடன் ஆயுதம் ஏந்தியதாக கூறப்படுகிறது.
சுமார் 650,000 குடியிருப்பாளர்கள் வசிக்கும் நகரமான இஷெவ்ஸ்க் நகரின் மையத்தில், மத்திய அரசு கட்டடங்களுக்கு அருகில் பாடசாலை உள்ளது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
2021-ம் நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான உலக வர்த்தக தகவ
தனது திருமண நிகழ்விற்கு தாமதமாக சென்ற மணப்பெண் ஒருவர்
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்
பிப்ரவரி மாதம் இந்தியாவில் இருந்து சுமார் 8 லட்சத்து 70
மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா நாடு, பிரான்ஸ் நாட்டிட
நோட்டோவில் இணைய விரும்பும் பின்லாந்து, ஸ்வீடன் நாடுகள
பாப்பரசர் பிரான்சிஸ் அடிகளார் ஈராக்கிற்கான விஜயத்தை
அமெரிக்கா-ஈரான் இடையே அணு ஆயுதவிவகாரத்தில் பிரச்சினை
உக்ரைன்-ரஷ்யா இடையே நிலவி வரும் போர் பதற்றத்திற்கு மத
உக்ரைய்ன் மீது குறைவான விமானத் தாக்குதல்கள் இடம்பெற்
உக்ரைன் மீது போர் தொடுக்க விரும்பாத ரஷ்ய வீரர்கள் பலர
எகிப்து நாட்டின் 3-வது மிகப்பெரிய நகரமான அலெக்சாண்டிர
பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தான் தூதராக நிஜிபுல்லா அ
காபூல் விமான நிலையத்தில் காத்துக் கிடந்த 107 இந்தியர்கள
