ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 26ஆம் திகதி ஜப்பான் செல்லவுள்ளார்.
ஜப்பானில் நீண்ட காலம் பிரதமராக இருந்த அபே, ஜூலை 8 ஆம் திகதி தனது 67 வயதில் அரசியல் கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
செப்டம்பர் 27ஆம் திகதி நடைபெறும் அபேயின் இறுதிச் சடங்கில் ஜப்பான் மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து நூற்றுக்கணக்கான பிரமுகர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பானுக்கான விஜயத்தின்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா மற்றும் ஜப்பானிய அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜப்பானுக்கான விஜயத்தைத் தொடர்ந்து ஜனாதிபதி பிலிப்பைன்ஸுக்கும் பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 29ஆம் திகதி பிலிப்பைன்ஸில் நடைபெறவுள்ள ஆசிய வளர்ச்சி வங்கி ஆளுநர்கள் கூட்டத்தில் அவர் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது விஜயத்தின் போது பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பொங்போங் மார்கோஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸிற்கான தனது விஜயங்களை முடித்துக் கொண்ட ஜனாதிபதி எதிர்வரும் செப்டெம்பர் 30 ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளார்.
கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மாருக்கும
முள்ளியவளையில் நகர் பகுதியில் விபத்தினை ஏற்படுத்திய
கொழும்பின் சில பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்
இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்
தமிழ் மக்கள் ஒற்றுமையில்லாத சக்தியாக உள்ள நிலையை பயன்
நாடு தற்போதைய பணவீக்க சூழ்நிலையில் இருந்து விடுபட கடு
யுத்த காலத்தில் இறந்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பினை ஏற்று இரண
அடக்குமுறையைக் கையாள்வதன் ஊடாக அரசியல் மற்றும் சமூக ஸ
சீனாவில் இருந்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் அதி
எஹலியகொட பிரதேசத்தில் பாடசாலை மாணவியான பத்து வயது சிற
யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் முச்சக்கர வண்டி
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக குற்
தந்தை,தாய், மற்றும் மகள் என ஒரே குடும்பத்தைச்
இலங்கையின் 74 வது ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு 3ம்,4