விளையாட்டுத்துறை அமைச்சினால் நியமிக்கப்பட்ட கிழக்கு மாகாண விளையாட்டுப் பேரவை முற்பகல் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் கூடிய பாடசாலை மட்டத்தில் அடையாளம் காணும் விளையாட்டு வீரர்களை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்லும் வரை அவர்களை பாதுகாப்பதற்கான விசேட திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன் பாடசாலை நேரம் முடிவடைந்த பின்னர் விளையாட்டுக் கழகங்கள் மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பு அமைப்புகளுக்கு அந்த விளையாட்டு வீரர்களை இடமாற்றம் செய்வதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை அமைப்பது தொடர்பிலும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது. அந்த திறமையான விளையாட்டு வீரர்கள் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவும்இ அவர்களின் நல்வாழ்வுக்காக மாகாண விளையாட்டு நிதியை நிறுவவும் இதன்போது முடிவு செய்தனர்.
இதேவேளை மாகாண விளையாட்டுத் திணைக்களத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவுகள் இருந்தால் ஒரு வாரத்திற்குள் நடைமுறைப்படுத்துமாறும் ஆளுநர் அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிகழ்வில் மாகாண பிரதம செயலாளர் துசித பி. வணிகசிங்ஹ, ஆளுநரின் செயலாளர் எல்.பி. மதநாயக்க, மாகாண கல்விச் செயலாளர் எச்.ஈ.எம்.டப்லியு. ஜி திஸாநாயக்க, மாகாண விளையாட்டுப் பணிப்பாளர் என்.எம்.நௌபீஸ் உட்பட மாகாண விளையாட்டு சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பேச
களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று
இலங்கையின் கட்சிகள் பெறும் வாக்குகளின் வீதம் தொடர்பி
ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளை கண்டுபிடிக
ஒரு தடவை மற்றும் குறுகிய காலத்திற்கு பாவனைக்கு எடுத்த
நோர்வூட் தொடக்கம் பொகவந்தலாவ வரையிலான பிரதான வீதியில
இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில
வவுனியா வேப்பங்குளத்தில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்
நடைபெறவுள்ள ஹர்த்தாலின் பின்னர் அரசாங்கம் வீட்டுக்க
கொழும்பில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட பெண் ஒருவர் மாட
இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலையை கண்டு என் இதயம் நொறுங்க
2019 ஆம் ஆண்டு ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட வன்முறை மற்று
பதுளை - ஸ்பிரிங்வெளி தோட்ட, நாவலவத்தையில் (4ஆம் பிரிவு) வ
சுயாதீன மனித உரிமை தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழ
புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களின் முதலீடுகளை பெற