சட்டம் தாண்டி சமூகத்தையும் சட்ட மாணவர்கள் படிக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை பெருங்குடியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வெள்ளிவிழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர் 'இந்தியாவில் சட்ட பல்கலைக்கழகத்தை நிறுவிய முதல் மாநிலம் தமிழகம் தான். அரசு சட்டக்கல்லூரி மூலம் கிராமப்புற மாணவர்கள் எளிதாக சட்டம் பயின்று வருகின்றனர்.
கிரீன்வேஸ் சாலையில் தாம் குடியேற இருந்த இல்லத்தை சட்டப் பல்கலைக்கழகத்திற்காக கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி. சீர்மிகு சட்டப்பள்ளியில் பயில்வோரில் 70 சதவீதம் பேர் மாணவிகள். 40 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட சட்டப் பல்கலைக்கழகத்தில் தற்போது 4500க்கும் அதிகமானோர் படித்து வருகின்றனர்.
சட்ட விதி மட்டுமின்றி அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமைகளையும் சமூக நீதியையும் காபாற்றும் வகையில் சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள் செயல்பட வேண்டும். ஏழைஇ எளிய மக்களின் அடிப்படை உரிமைகளை காக்கும் வழக்கறிஞர்களாக சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள் செயல்பட வேண்டும்.
அவர்களின் நலனுக்காக தங்கள் வாதத் திறமையை வழக்கறிஞர்கள் பயன்படுத்த வேண்டும். சட்டம் தாண்டி சமூகத்தையும் சட்ட மாணவர்கள் படிக்க வேண்டும்.' இவ்வாறு அவர் கூறினார்.
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இந்திய பல்கலைக்கழக ச
அரசியல் பிரமுகர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்
கொரோனா நோய்த் தொற்று காரணமாக 2020-ம் ஆண்டுக்கான நீட் மற்ற
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் தே
கேரளாவில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் யானை பாகன் மீ
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருச்சி மத்திய
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மாதம் 24-ந
புதுச்சேரியில் விற்பனை செய்யப்படும் அனைத்து உள்நாட்
செங்கல்பட்டு மாவட்டம் பூஞ்சேரி பகுதியில் வாழும் நரிக
சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,30,982
