ஜப்பானை தடம் புரட்டிய சக்தி வாய்ந்த புயலால் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளதோடு 90 பேர் காயமடைந்துள்ளனர்.
நன்மடோல் புயல்' என்ற மிகப்பெரிய புயல் தென்கோடியில் உள்ள கியூஷு தீவில் கரையைக் கடந்ததில் ஒன்பது மில்லியன் மக்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் 350000 வீடுகளுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
இந்த புயலைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில் 400 மிமீ (16 அங்குலம்) மழை பெய்யும் என்று கணிப்புகள் கூறுகின்றன.
வெள்ளத்தில் கார் மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்ததாகவும் மற்றொருவர் நிலச்சரிவில் புதைந்து இறந்ததாகவும் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
தலைநகர் டோக்கியோவில் கனமழை பெய்தது வெள்ளம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக புல்லட் ரயில் சேவைகள், படகுகள் மற்றும் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
பிரதமர் ஃபுமியோ கிஷிடா புயலின் தாக்கத்தை கண்காணிக்க செவ்வாய்கிழமை வரை ஐ.நா. பொதுச் சபையில் உரை நிகழ்த்தவிருக்கும் நியூயோர்க்கிற்கு விஜயம் செய்வதைத் தாமதப்படுத்தினார்.
சுப்பர் சூறாவளி மணிக்கு 234 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசியது. இது நான்கு அல்லது ஐந்து வகை சூறாவளிக்கு சமம்.
வங்கக்கடல் பகுதியில் உள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகளà
மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் ஒரே நாள் இரவில் மழையும்,
ரஷியா - உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா ரஷியாவை தொடரà
இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலின் மையமாக கிழக்கு ஜெருசலேம் உளà
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்க
அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடனà
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் எபோலா நோய்த்தொறà
ரஸ்யாவின் ஆக்கிரமிப்பு போரை முடிவுக்கு கொண்டுவருவதறà¯
உலகிலேயே மிகப்பெரிய வைரம் 1905-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க ந
ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட் நாட்டின் பிரதமராக இருந்த
ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு அதிவேகத்தில் செல்லும
இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை உள்ளடக்கிய ஜி-20 அமைப்பின் உச
சர்வதேச நீதிமன்ற உத்தரவு உக்ரைனுக்கு கிடைத்த வெற்றி எ
ஆப்பிரிக்காவில் பெண்ணை கொன்ற ஆட்டிற்கு சிறை தண்டனை வி
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி உள்ள நிà
