More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • தோட்டக் கம்பனிகளின் பிரித்தாளும் சூழ்ச்சிக்குள் தொழிலாளர்கள் சிக்கிவிடக்கூடாது – ஜீவன்!!
தோட்டக் கம்பனிகளின் பிரித்தாளும் சூழ்ச்சிக்குள் தொழிலாளர்கள் சிக்கிவிடக்கூடாது – ஜீவன்!!
Sep 19
தோட்டக் கம்பனிகளின் பிரித்தாளும் சூழ்ச்சிக்குள் தொழிலாளர்கள் சிக்கிவிடக்கூடாது – ஜீவன்!!

ஒருமித்த நோக்குடன் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்தால் வெற்றி நிச்சயம். தொழிலாளர்களுக்கு பக்கபலமாக நாம் நிற்போம் – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும்இ நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.



மஸ்கெலியா பெருந்தோட்டத்தின் கீழ் இயங்கும் தோட்டங்களின் தோட்ட தொழிலாளர்கள் கடந்த சில நாட்களாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர்.



இந்நிலையில் நேற்று மஸ்கெலியா அம்பாள்ஸ் மண்டபத்தில் குறித்த தோட்ட தொழிலாளர்களை ஜீவன் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடிய பின் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.



இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு 'மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனமானது தொழிலாளர்களை துன்புறுத்திவருகின்றது. இந்நிலையில் தமது தொழில்சார் உரிமைகளுக்காக தொழிலாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். நாமும் அதற்கு பக்கபலமாக இருக்கின்றோம். எதற்காக தற்போது தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது என நீங்கள் கேட்கலாம்.



ஆயிரம் ரூபா தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. அதனால்தான் நாம் நடவடிக்கையில் இறங்கவில்லை. தற்போது நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளிவந்துள்ளது.



தொழிற்சங்கங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. எமது கோரிக்கை நியாயமானது. அதனால்தான் போராடுகின்றோம். நாளை நாம் சம்பள நிர்ணய சபைக்கு சென்றால்கூட எமக்குதான் சாதகமாக அமையும்.



தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கிடையில் ஒற்றுமை இருக்க வேண்டும். அவ்வாறு ஒற்றுமை இருப்பது எமக்கு பலம். எனினும்இ அந்த ஒற்றுமை எம்மிடையே முழுமையாக இல்லை. அது எமது பலவீனமாகும்.



எமது இந்த பலவீனம் நிர்வாகத்துக்கு சாதகமாக அமைந்துவிடுகின்றது. எமது ஒற்றுமையை கண்டு தோட்ட நிர்வாகங்கள் நடுங்க வேண்டும். ஆயிரம் ரூபாவை ஓரணியில் நின்று கேட்க வலியுறுத்தினோம்.



அச்சத்தால் தொழிலாளர்கள் பிளவுபட்டு நின்றனர். துரைமாரை கண்டு அஞ்ச வேண்டியதில்லை. கட்சி தொழிற்சங்க பேதங்களும் அவசியமில்லை. தொழில்சார் உரிமைகளுக்காக தொழிலாளர்கள் ஒற்றுமையாக – ஒழுக்கமாக செயற்பட வேண்டும்.



மக்கள் ஒன்றிணைந்து நாட்டின் ஜனாதிபதியையே மாற்றினர். எனவேஇ ஒற்றுமையின் வலிமையை புரிந்துகொள்ள வேண்டும்.



மலையகத்துக்கு திடீரென வரும் சில அரசியல்வாதிகள்இ தொழிற்சங்கங்களை விமர்சிப்பார்கள் ஆனால் கம்பனிகளை விமர்சிப்பதில்லை. அப்படியானவர்கள் கூறும் கருத்தை எம்மவர்களில் சிலர் நம்புவதும் உண்டு. இந்நிலைமையும் மாற வேண்டும். ' – என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Dec12

நாட்டின் சில பிரதேசங்களில் பால்மாவுக்கு மீண்டும் தட்à

Mar15

முல்லைத்தீவு அபிவிருத்தி ஒன்றியமானது முல்லைத்தீவு மà®

Jan27

லங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதாà

Mar08

 பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்த சட்à®

Apr03

நீதிமன்ற தீர்ப்பு தொழிலாளர்களுக்கு சாதகமாக அமையாவிடà¯

May03

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிà

Nov05

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லாவெரடுவுக்கும், இ

May20

13வது போர் வெற்றியாண்டு நிகழ்வு அரச தலைவர் கோட்டாபய ராஜ

Feb14

இலங்கைக்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ரோல்à®

Sep29

ஒவ்வொரு மாகாணத்திற்கும் வெவ்வேறு பிரச்சினைகள் இருப்à®

Mar03

இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் அர்தà

Oct13

காலநிலை மாற்றத்தால் இலங்கை மிகவும் பாதிப்படைவதாக ஜனாà

Jan27

க.பொ.த உயர்தர 2021 பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும்

Oct19

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுகà

Sep19

மனித உரிமைமீறல் துஷ்பிரயோகம் என பல நாடுகள் இலங்கை குறà®

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (09:02 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (09:02 am )
Testing centres