More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு எதிராக பொருளாதார தடை - ஐநா
போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு எதிராக பொருளாதார தடை - ஐநா
Sep 08
போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு எதிராக பொருளாதார தடை - ஐநா

இலங்கையை திவாலாக்கியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் கோரிக்கை விடுத்துள்ளார்.



மேலும், போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறும், சர்வதேச சட்டத்தின்படி செயற்படுமாறும் உறுப்பு நாடுகளை கேட்டுக் கொண்டுள்ளார்.



ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.



போராட்டங்களை ஒடுக்குவதையும் நிறுத்த வேண்டும் 



மனித உரிமைகள் பேரவையின் 52ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் 12ஆம் திகதி முதல் ஒக்டோபர் 7ஆம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.



இதில் பங்கேற்பதற்காக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் ஏற்கனவே ஜெனிவா சென்றுள்ளனர்.



நாகரீக உலகம் ஏற்றுக்கொள்ளாத கடுமையான சட்டங்களைப் பயன்படுத்துவதையும், அமைதியான போராட்டங்களை ஒடுக்குவதையும் நிறுத்துமாறு மனித உரிமைகள் ஆணையம் இலங்கை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.



அத்துடன், நம்பகமான உண்மையைக் கண்டறியும் பொறிமுறையொன்றை உருவாக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் மனித உரிமைகள் ஆணைக்குழு, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் முன்னேற்றமடையாமல் இழுத்தடித்து வருவது குறித்தும் கவலை வெளியிட்டுள்ளது.



சர்வதேச ஆதரவுடன் விசாரணைக்கு கோரிக்கை 



வடக்கு கிழக்கில் இருந்து இராணுவத்தை மீளப் பெறவும், பாதுகாப்புப் படைகளை சீர்திருத்தவும் அவர் பரிந்துரை செய்துள்ளார்.



இலங்கை ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது எனவும் போர்க்குற்றம் சுமத்தப்பட்ட இராணுவ வீரர்களின் விடுதலையை ரத்து செய்யுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.



11 இளைஞர்கள் காணாமல் போனமை தொடர்பிலான அறிக்கையில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்ணகொடவின் பெயரையும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சர்வதேச ஆதரவுடன் விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct07

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தமது சிறப்புரிமை ம

Mar28

லொறியுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதிà®

Jan26

தோட்டத்தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை

Oct08

கொழும்பு பங்குச் சந்தையில் நேற்றைய தினம் எதிர்பாராத வ

Oct02

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் இன்னமும் முழுமையான கட்ட

Mar12

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நà

Apr15

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களà®

Feb02

மன்னாரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (31) முதல் மீன்பிடிப் பà®

Jul20

எதிரணியினரால் கொண்டுவரப்பட்டுள்ள வலுசக்தி அமைச்சர் à®

Mar22

சர்வதேச நாணய நிதியத்தின் கடனின் முதல் தொகுதி கிடைத்தி

Apr27

ஜனாதிபதி பதவி விலக வேண்டும் மற்றும் பிரதமர் தலைமையிலா

Feb07

மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான கடன் கடிதத்தைத் திறà

Sep27

திரிபோஷாவில் விசத்தன்மை உள்ளதாக கூறப்பட்டமை தொடர்பாà®

Feb14

வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தà¯

Sep16

புகழ்பெற்ற இலக்கியத் திறனாய்வாளரும் ஊடகத்துறையில் பà®

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 16 (04:01 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 16 (04:01 am )
Testing centres