வவுனியா பெரிய உலுக்குளம் பகுதியில் இன்று (02) காலை மருமகனின் தாக்குதலுக்கு இலக்காகி மாமியார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், குறித்த நபரின் மனைவி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கணவனுக்கும், மனைவிக்கும் இடையில் இன்று காலை முதல் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. அது முற்றிய நிலையில் வீட்டில் இருந்த கோடரி மற்றும் கத்தியை கொண்டு கணவன் மனைவி மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
இதனைதடுக்க சென்ற மனைவியின் தாயார் மீதும் கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளார். இதனால் தலையில் பலத்த காயமடைந்த பெரிய உலுக்குளம் பகுதியை சேர்ந்த 60 வயதான டி.பி. அமராவதி, என்ற பெண் உயிரிழந்த நிலையில், அவரது மகளான 37 வயதான துலிகா ரத்தினசிறி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலை முன்னெடுத்த நபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எமது உறவுகளை தொலைத்துவிட்டு ஒவ்வொருநாளையும் துக்கத்
நாட்டில் உளுந்து இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டத
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் சனிக்கிழமை (03) வவ
சந்தையில் தற்போது பெரி டின் மீன் ஒன்றின் விலை 600 ரூபாவா
அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பமா
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் கடமைக்கு இடையூறு வி
நாடாளுமன்றத்தில் கட்டடத் தொகுதியில் நேற்று செய்தி சே
எந்தவொரு கொரோனா தடுப்பூசியியையேனும், பெற்றுக் கொள்ளா
இலங்கையை அண்மித்த பகுதிகளில் குறைந்த வளிமண்டலத் தாழ்
கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி நேற்று மாலை முதல் 14
அரசியல்வாதிகளின் பொறுப்புகள் நிறைவேற்றப் பட்டால், மக
கறிமிளகாய் மற்றும் பச்சை மிளகாய் தவிர்ந்த ஏனைய மரக்கற
ஒண்லைன் வகுப்புக்கள் மாணவர்களிற்கு பல்வேறு தாக்கங்க
60 வயதில் வைத்தியர்கள் ஓய்வு பெறுவதால் சுகாதார சேவை வீழ
காம்பியாவில் 66 சிறுவர்களின் உயிரிழப்புக்கு காரணமான க