உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு சதி மற்றும் உதவிய குற்றச்சாட்டின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் 17வது பிரதிவாதியாக குறிப்பிடப்பட்ட யாசிர் பாபா அப்துல் ரவூப் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இதன் காரணமாக குறித்த வழக்கு விசாரணையை மார்ச் 31 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழு இன்று (28) தீர்மானித்துள்ளது.
வழக்கின் 17ஆவது பிரதிவாதி கடந்த 5ஆம் திகதி உயிரிழந்ததாக சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஹரிபிரியா ஜயசுந்தர, குறித்த பிரதிவாதி உயிரிழந்துள்ளதால் வழக்கு தொடர்பான குற்றச்சாட்டில் திருத்தம் செய்ய அனுமதிக்குமாறு நீதிமன்றில் கோரினார்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பின்னர் திறந்த நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையில் திருத்தம் செய்தது.
இதையடுத்து, விசாரணையை எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பில் ஸ்ரீ லங்கா பொது
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீ
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர
சிறைச்சாலை கட்டளைச்சட்டத்தின் கீழ் சிறைக்கைதிகளின்
இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல்
மேல், சப்ரகமுவ மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் க
சாவகச்சேரியில் சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரமின்றி மற
அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவி வகிக்கும் ஒருவர
யாழ்ப்பாணக் கோட்டை மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் இ
கொழும்பிலுள்ள எரிபொருள் நிலையமொன்றில் பதற்ற நிலை ஏற்
கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலும் 03 பேர
22ஆவது திருத்தத்துக்கு குறைபாடுகளை சுட்டிக்காட்டி ஆதர
பால்மா விலைக்குறைப்பு தொடர்பில் எவ்வித தீர்மானமும் எ
முன்னாள் ஜனாதிபதியின் மகன் நாடாளுமன்ற உறுப்பினர் நாம
வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் 10 வயதுடைய சிறுமி ஒருவ
