நடப்பாண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு 15% ஆக இருக்கும் என்று சர்வதேச நிதியத்தின் இயக்குநர் கிறிஸ்டாலினா தெரிவித்துள்ளார். உலகின் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறிப்பிடத்தக்க வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது. உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில், 3.4 சதவீதத்தில் இருந்து 2.9 சதவீதமாக குறைந்துள்ளது. இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் மேலாண் இயக்குநர் கிறிஸ்டாலினா ஜார்ஜிவா, ``உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி சரிவடைந்த நிலையிலும், உலக சந்தையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஆச்சரியமூட்டும் வகையில் பிரகாசமாக உள்ளது. நடப்பாண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு 15 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இந்தியா விடுபட டிஜிட்டல் மயமாக்கல் முக்கிய காரணமாக உள்ளது. இதனால் புதிய வாய்ப்புகள் மற்றும் வேலைகள் உருவாக்கப்பட்டன. இந்தியாவின் பொருளாதார நிலைக்கு அதன் நிதிக் கொள்கை ஆதாரமாக இருக்கிறது. சமீபத்திய நிதி நிலை அறிக்கையில், நிதி ஒருங்கிணைப்புக்கான அர்ப்பணிப்பு, மூலதன முதலீட்டுக்கான நிதியின் மூலம் இது தெரிய வருகிறது. இவை அடுத்த நிதியாண்டில் நாட்டின் நிலையான வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும்,’’ என்று தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதா
உலக அளவில்
உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பை ரஷ்யா நிறுத்தக் கோரி ஐ.ந ரஷ்ய ஜனாதிபதியான புடினுடைய மகள்,உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவ பிரித்தானிய விமான நிலையங்களில் இருந்து பறக்கும் பிரி ரஷ்யாவில் நிஜ்னி நவ்கரோடு பகுதியில் உள்ள லோபசெவ்ஸ்கை அமெரிக்காவில் நடுக்கடலில் நின்ற படகை சரி செய்ய நண்பர் தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ஜனநாயக ரீதியில் தே இந்தோனேசியாவில் 2 தினங்களுக்கு முன் ஏற்பட்ட நிலநடுக்க உலக அளவில் கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உ உக்ரைன் - ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான நிலைமையை அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஒசாமா பின்லேடன இத்தாலியில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிரிக்க தொடங்க இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான
