இந்தோனேசியா மற்றும் காம்பியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமான மருந்து திரவங்கள் இலங்கையில் பயன்பாட்டில் இல்லை என்று தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மருந்து கட்டுப்பாட்டு அதிகாரசபையினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கடுமையான விதிமுறைகளை கருத்திற்கொண்டு உயர்தர மருந்துகளை மாத்திரமே இலங்கைக்கு இறக்குமதி செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் பொருளாளர் மஞ்சுள ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் காம்பியாவில் ஒரு வகை இருமல் மருந்து காரணமாக 70 குழந்தைகள் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தன. பின்னர் இந்தோனேசியாவில் சிரப் மற்றும் மருந்து திரவங்களால் சுமார் நூறு குழந்தைகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்தோனேசிய அதிகாரிகள் நடத்திய சோதனையில் சிரப் ஒன்றில் சிறுநீரகத்துக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனம் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.
இந்த மருந்தைப் பெற்ற 200 குழந்தைகளை பரிசோதித்ததில் அவர்களுக்கு சிறுநீரக கோளாறு இருப்பது கண்டறியப்பட்டதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் விமானப் படைச் சிப்பாய் ஒ
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராகத் தீர்மா
ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு
கடந்த 30 வருடங்களில் 27 வருடங்கள் வெற்றிகரமாக நடத்திய தொ
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் நாட்
வீடு ஒன்றின் தோட்டத்தில் சூட்சுமமான முறையில் 53 கஞ்சா ச
மின்சார துண்டிப்பு பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக
ஒரு தடவை மற்றும் குறுகிய காலத்திற்கு பாவனைக்கு எடுத்த
நேற்றைய தினத்தில் (10) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட்,
திருகோணமலை - மூதூர், பட்டித்திடல் பகுதியில் இடம்பெற்ற
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்ப
இலங்கை மக்களிற்கு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உ
நான் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் சிறிகொ
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெருமளவிலான உறுப்பினர்க
நாட்டுக்கு ஒரு மாற்று அரசியல் கட்சியொன்று அவசியம் என்
