நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் அதிபரின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுகின்றனர்.
இவர்களை விடுதலை செய்கின்றமைக்காக அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவுக்கும் நாடாளுமன்றத்தில் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நன்றி தெரிவித்தார்.
அதிபரின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படும் 8 பேரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் ஐந்து வருடம் முதல் 200 வருடங்கள் வரை தண்டனை வழங்கப்பட்டவர்கள் என்று சார்ள்ஸ் நிர்மலநாதன் கூறினார்.
'இவர்களின் விடுதலை தொடர்பாகச் சிறைச்சாலை திணைக்களத்தினரிடம் நான் தொடர்பு கொண்டபோது குறித்த 8 பேரை விடுவிப்பதற்கான கடிதம் கிடைத்திருக்கின்றது எனவும், 8 பேரும் தீபாவளி தினத்தன்று விடுதலை செய்யப்படவுள்ளனர் எனவும் அவர்கள் அறிவித்தனர்' என்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டார்.
அத்துடன் விடுவிக்கப்படுவோரின் பெயர்களையும் சார்ள்ஸ் நிர்மலநாதன் வெளியிட்டுள்ளார். அவர்களின் பெயர்கள் வருமாறு,
01) வரதராஜன்
02) ரகுபதி சர்மா
03) இலங்கேஷ்வரன்
04) நவதீபன்
05) ராகுலன்
06) காந்தன்
07) சுதா
08) ஜெபநேசன். ஆகியோரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் பாண்டிச்சேரியில் உள்ள காரைக்கால் துறைமு
'நாங்கள் ஒன்று சேர்ந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம்
தியாக தீபம் திலீபனை கட்சி அரசியலுக்காக பயன்படுத்த சில
ஆசிரியர்களை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு செ
குளுக்கோமா நோயினால் கண் பார்வை இழக்கும் அபாயம் அதிகம்
களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தின் மின் உற்பத்தி பணிகள் ம
அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுள்ள எந்தவொரு அபிவிருத
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே ம
வெளிநாட்டில் இருக்கும் மனைவியிடம் இருந்து பணம் பெ
சமகாலத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் இருந்து ந
நாட்டில் நட்புறவான வெளியுறவுக் கொள்கை இல்லாததுதான் த
ஆட்சியாளர்கள் மற்றும் பிரபல அரசியல்வாதிகளின் ஊழல், மோ
உடன் அமுலுக்கு வரும் வகையில் தின்பண்டங்களின் விலைகளை
சட்டக்கல்லூரி நுழைவுத் தேர்வு ஆங்கில மொழியிலேயே நடத்
அமெரிக்க திறைசேரியின் ஆசியாவுக்கான பிரதி உதவி செயலாள