தமிழக சட்டசபை பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாளை கூடுகிறது. அ.தி.மு.கவின் ஒற்றை தலைமை விவகாரம் சட்டசபையிலும் எதிரொலிக்கும் என்று கூறப்படுகின்றது.
சென்னை தமிழக சட்டசபை கூட்டம் நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவுக்கும் உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி முலாயம்சிங் யாதவ் மறைவுக்கும் அனுதாபம் தெரிவிக்கும் வகையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும்.
கோவைத்தங்கம் உள்ளிட்ட முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மறைவு குறித்தும் இரங்கல் தெரிவிக்கப்படும். அதன்பிறகு சட்டசபையின் அன்றைய நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படும். இதன் பிறகு 11 மணி அளவில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெறும்.
இந்த கூட்டத்தில் சட்டசபை எத்தனை நாட்கள் நடத்துவது என்று முடிவு செய்யப்படும். அனேகமாக 3 நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை துவங்கும் சட்டசபை கூட்டத்தில் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டு சபாநாயகருடன் வாக்குவாதம் செய்து சட்டசபையை புறக்கணிக்க கூடும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. காரணம் அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரத்தால் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதல் இப்போது சட்டசபையிலும் எதிரொலிக்க உள்ளது.
அ.தி.மு.க.வில் இருவரும் ஒருவரை ஒருவர் கட்சியில் இருந்து நீக்கிக் கொண்டதோடு இதுகுறித்து சபாநாயகருக்கும் கடிதம் கொடுத்திருக்கிறார்கள்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக பள்ளி, கல்லூர
ஜார்கண்ட் மாநிலம் தன்பாதில் மாவட்ட நீதிபதி ஆட்டோ ஏற்ற
புல்லாங்குழலை ஊதினால்தான் இசைபிறக்கும். ஆனால், காற்றி
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம
சென்னை இரண்டாவது விமான நிலைய பணிகளை உடனே தொடங்க வேண்ட
மந்திய மந்திரிசபையில் நேற்று நடைபெற்ற புதிய மாற்றங்க
கர்நாடக காங்கிரஸ் தலைவராக ஆர்.வி.தேஷ்பாண்டே இருந்த போ
திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் கிராமப்புற க
கர்நாடகா மாநிலத்தில் முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோ
பிரச்சாரத்தில் பழக்க தோஷத்தில் தங்க தமிழ்ச்செல்வம் இ
இலங்கையுடனான கடல் எல்லைக்கு அருகில் உள்ள பாக்கு நீரிண
அரச பேருந்து ஓட்டுனரை வழிமறித்து தாக்கிய நான்கு பேரை
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற உள்ளது. இந
வடசென்னையில் அயோத்திதாசருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட
சென்னை புறநகர் பகுதிகளுக்கு கூடுதல் மின்சார ரெயில்கள
