மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
புதுகுடியிருப்புஇ சிறுவர் இல்லம் முன்பாகவுள்ள வளைவு பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மூன்று இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாகச்சென்று வாகனமொன்றில் மோதிய விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தின்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் ஸ்லத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
குறித்த மோட்டார் சைக்கிள் மோதிய வாகனம் தப்பிச்சென்றுள்ள அதேவேளை மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் தலைக்கவசம் அணிந்திருக்கவில்லையென்பதுடன் அதிகவேகத்துடன் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் 16 மற்றும் 18வயதுடையவர்கள் எனவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் அர்தà
2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை- இந்திய சர்வதேச பரோ குத்துச்சண
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பதவியிலிருநà
வென்னப்புவ பகுதியில் புகையிரதத்தில் மோதி நபர் ஒருவர்
கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் காவல்துறையினரின
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானà®
வவுனியா வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் ஆண் ஒருவர் மர
யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட இளைஞர் ஒருவர் மொரட்à
நீதி அமைச்சினால் சமாதான நீதிவான்களாக நியமிக்கப்பட்ட 1
பிரித்தானியாவில் இனங்காணப்பட்ட B.1.1.7 என்ற புதிய வகை கொரà¯
எதிர்வரும் இரண்டு வாரங்களில் நாட்டில் கொவிட் தொற்றாளà
யாழ்ப்பாணம் கண்டி நெடுஞ்சாலையில் மிருசுவில் அமைந்திà®
வவுனியா மாகாண பொது வைத்தியசாலையினை போதனா வைத்தியசாலைà
வளவை ஆற்றில் நீராட சென்ற நிலையில், பாடசாலை மாணவி ஒருவரà
எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் இலங்கையினà¯
