நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தமது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக தயாசிறி ஜயசேகர நாடாளுமன்றத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளார்.
தான் வசிக்கும் வீட்டின் மின்சாரக் கட்டணம் சுமார் 11 இலட்சம் ரூபாய் நிலுவைகளாக இருப்பதாக கூறி நேற்று அமைச்சர் காஞ்சன விஜயசேகர நாடாளுமன்றத்தில் தெரிவித்தமையானது தமது சிறப்புரிமையை மீறும் செயல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தான் மாத்திரமே மின்சாரக்கட்டணத்தை செலுத்தவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் தாம் வசிக்கும் வீட்டின் மின்சாரக்கட்டணம், தாம் பயன்படுத்திய மின்சாரத்திற்கான கட்டணம் அல்ல எனவும் அது ஏற்கனவே அங்கு வசித்த இரண்டு அமைச்சர்களின் கட்டணங்களும் சேர்ந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை ஹரின் பெர்னாண்டோ, கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் ஏ.எல்.எம் அத்தாவுல்லா போன்ற பலர் வசிக்கும் வீடுகளின் பல இலட்சம் ரூபாய் மின்சாரக்கட்டணங்களும் செலுத்தப்படாமல் உள்ளதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
எனினும் அந்த கட்டணங்கள் அவர்களின் சொந்த பயன்பாட்டு கட்டணங்கள் அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பின் புறநகர் பகுதியில் சிறப்பு அதிரடி படையினரு
வவுனியா- செட்டிகுளம் நகர்பகுதியில் இடம்பெற்ற விபத்தி
26 ஆயிரம் பைசர் தடுப்பூசிகள் நாளை நாட்டை வந்தடையவுள்ளன.
புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையின் கீழ் பொ
புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கு ஆதரவு கோரப்படுவதா
13 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உள்படுத்திய குற்றச்
சர்வதேச தகவல் உரிமை தினத்தினை முன்னிட்டு வெகுசன ஊடக அ
கொவிட்-19 சுகாதார வழிகாட்டுதல்ளைப் பின்பற்றி எதிர்வரு
தமிழினத்துக்கு கடந்த காலத்தில் இடம்பெற்ற இனப்படுகொல
நாட்டுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படுவதை அ
பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான குறுகிய மற்றும் ந
இலங்கை சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு தமது உறவுகளை
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் நான்கு வான் கதவுகள் தி
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளரினால், இலங்
