நாவலப்பிட்டி ஹபுகஸ்தலாவ பிரதேசத்தில் வீடு ஒன்றிலிருந்து 12 ரக துப்பாக்கி மற்றும் வெற்றுத்தோட்டாக்கள், வேட்டையாடப்பட்ட மானின் தோல் ஆகியவற்றுடன் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாவலப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபரிடமிருந்து அனுமதிப்பத்திரமின்றி வைத்திருந்த 12 ரக துப்பாக்கி ஒன்றும், வெற்றுத்தோட்டா க்களும் மானின் தோலும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட 29 வயதுடைய சந்தேக நபரை நாவலப்பிட்டி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக துப்பாக்கியை பயன்படுத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை சந்தேக நபர் மேற்படி துப்பாக்கியை எங்கிருந்து எடுத்து வந்தார்? என்ற கேள்விக்கு பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கைத் தீவில் எங்கள் தமிழ் இனத்தின் நீண்ட நெடிய வரல
பிரதமரின் வங்கிகணக்கிலிருந்து பலமில்லியன் ரூபாய்களை
தனது பிள்ளைகள் மூன்று நாட்களாக பட
மக்களின் போசாக்கு பிரச்சினைகளை கண்டறிய நாடளாவிய ரீதி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், இந்தியத் தூதுவர் க
சீனாவிடம் 1500 மில்லியன் டொலர்களை இலங்கை கோரிய போதிலு
இலங்கை மத்திய வங்கி, அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை
நீதிமன்றங்களிலும் வழக்குக்கோவைகள் குவிந்து கிடக்கின
ஜனாதிபதி கோட்டாபயவிற்கும் சம்பந்தன் தலைமையிலான தமிழ
இரண்டு நாள் உத்தியோகவூர்வ விஜயத்தை மேற்கொண்டு பங்களா
நுவரெலியா வலப்பனை பகுதியில் குழியொன்றுக்குள் இருந்த
கொழும்பு துறைமுகத்தில் இரண்டு எரிபொருள் தாங்கி கப்பல
கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டம் ஒன்ற
குருந்தூர்மலைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பா
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டடான் பிரதேச செய
