டுபாயில் கட்டப்பட்ட புதிய இந்து கோவிலின் திறப்பு விழா இன்று மாலை நடைபெறுகிறது.
டுபாயில் உள்ள ஜெபல் அலி பகுதியில் கட்டப்பட்டுள்ள துபாயின் புதிய இந்து கோவில் இன்று திறக்கப்பட உள்ளது.
இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறும் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டு கோவிலை திறந்து வைக்க உள்ளனர். இந்த கோயிலானது ஏற்கெனவே அமைந்துள்ள சிந்தி குரு தர்பார் கோயிலின் விரிவாக்கம் ஆகும்.
சிந்தி குரு தர்பார் கோவிலானது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பழமையான இந்து கோவில்களில் ஒன்றாகும். டுபாயின் புதிய கோவிலின் அடித்தளம் பெப்ரவரி 2020இல் நாட்டப்பட்டது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பின் பணிகள் நிறைவடைந்துள்ளன.
இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்காக இந்த கோயில் அதிகாரப்பூர்வமாக திறக்கப்படும். இந்த கோவில் அனைத்து மதத்தினரையும் வரவேற்கிறது மற்றும் வழிபாட்டாளர்கள் மற்றும் பிற பார்வையாளர்களுக்கு நுழைவதற்கும் அனுமதி அளித்துள்ளது கோவில் நிர்வாகம்.
தினசரி அடிப்படையில் சுமார் 1000 முதல் 1200 பக்தர்கள் வழிபாடு செய்யலாம். டுபாயின் புதிய இந்து கோவில் காலை 6:30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். கூட்ட நெரிசலை தவிர்க்க பார்வையாளர்களுக்கு கோவில் நிர்வாகம் கியூஆர் குறியீடு அடிப்படையிலான முன்பதிவு முறையை செயல்படுத்தியுள்ளது.
ஜெபல் அலி பகுதியில் பல தேவாலயங்கள் மற்றும் சீக்கிய குருத்வாரா உள்ள நிலையில் டுபாயின் புதிய இந்து கோவில் அமைக்கப்பட்டிருப்பதன் மூலம் டுபாயில் வசிக்கும் இந்து மதத்தினரின் பல ஆண்டு கனவு நிறைவேறியுள்ளதாக பலர் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் போரின்போது உக்ரைன் வான்வெளியை தமது கட்டுப்பா
தென் அமெரிக்க நாடான ஈக்குவாடோரின் – குயாக்வில் நகரி
கொரோனா தொற்று நோயில் இருந்து உலகம் விடுபடுவதற்காக பல்
உக்ரைன் நகரங்களில் தொடர்ந்து வான் தாக்குதலை ரஷ்ய துரு
உக்ரைனில் நடக்கும் போர் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட
இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் வால்டர் ஜெ லிண்டர் நேற்ற
12-வது நாளாக உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் நடந
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு, அமெரிக்காவி
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதா
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது.
அமெரிக்காவில் சிறப்பு பல்பொருள் அங்காடியொன்றுக்குள்
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட
தமிழ் சினிமா
சிறப்பானவை

![]()
Sri Lanka
Active Cases
4796
Total Confirmed
15024
Cured/Discharged
10183
Total DEATHS
45
World
Active Cases
4796
Total Confirmed
15024
Cured/Discharged
10183
Total DEATHS
45