தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்' மற்றும் 'நானே வருவேன்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்ற நிலையில் அவரது நடிப்பில் உருவான 'வாத்தி' திரைப்படம் வரும் டிசம்பரில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தனுஷின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ஒரு திரைப்படம் உருவாக உள்ளது என கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தொடங்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கு திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகும் இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாக உள்ளது.
இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தில் நடிக்கும் நாயகி உள்பட மற்ற நட்சத்திரங்களின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'கேப்டன் மில்லர்' என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பரில் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெய் நடிப்பில் வெளியான 'அதே நேரம் அதே இடம்' படத்தின்
நடிகர் தனுஷ் 2002-ல் வெளிவந்த ‘துள்ளுவதோ இளமை’ படத்தி
பிக்பாஸ் 5வது சீசனில் புதுமுக பிரபலங்களுக்கு நடுவில்
இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராட் கோலி, நடிகை அனுஷ்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2021-ம் ஆண்டுக்கான மெல்போர்
தமிழில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான ‘ஆனந்தம்’ படம் மூல
பாரதி கண்ணம்மா சீரியல் விஜய்யில் செம ஹிட்டாக ஓடிக் கொ
நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியின் பிரிவுக்கு உண்மையா
சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் அதிகரித்த பிறகு இளையராஜ
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ம
தெலுங்கு படமான அர்ஜுன் ரெட்டியில் விஜய் தேவரக்கொண்டா
மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடி
ஆனஸ்ட் ராஜ், சத்ரியன், கேப்டன் பிரபாகரன், சின்ன கவுண்டர
பாக்கியலட்சுமி தமிழ் சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓட
தனுஷ் நடிப்பில் உருவாகி வந்த ‘மாறன்’ படத்தின் படப்
