More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • விடுமுறை நாட்களை முன்னிட்டு ராகுல் காந்தி நடைப்பயணம் இரத்து!
விடுமுறை நாட்களை முன்னிட்டு ராகுல் காந்தி நடைப்பயணம் இரத்து!
Oct 03
விடுமுறை நாட்களை முன்னிட்டு ராகுல் காந்தி நடைப்பயணம் இரத்து!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை பாத யாத்திரையை கடந்த மாதம் 7 ஆம் திகதி கன்னியாகுமரியில் ஆரம்பித்தார்.



கேரளா மாநிலம் வழியாக அவரது பாத யாத்திரை பயணம் தொடர்ந்தது. தற்போது ராகுல்காந்தி கர்நாடகா மாநிலத்தில் பாத யாத்திரை மேற்கொண்டு வந்தார்.



அவரது நடைப்பயணம் இதுவரை சுமார் 630 கி.மீ. தொலைவை நிறைவு செய்து உள்ளது. இன்று காலை 6.30 மணிக்கு ராகுல்காந்தியும் காங்கிரஸ் தொண்டர்களும் மைசூரில் நடைபயணத்தை தொடங்கினார்கள்.



இன்று காலை 11 மணிக்கு அவரது நடைபயணம் மாண்டியா மாவட்டத்துக்குள் சென்றது. ஸ்ரீரங்கபட்டினத்தில் அவரது நடைபயணத்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று மாலை பாண்டவர்புரத்தில் அவரது நடைபயணம் முடிகிறது.



இதையடுத்து நாளை, நாளை மறுநாள் 2 நாட்கள் நடைபயணத்துக்கு ஓய்வு அளிக்க ராகுல்காந்தி முடிவு செய்து உள்ளார். நாளை ஆயுதபூஜை, நாளை மறுநாள் விஜயதசமி என்பதால் 2 நாட்களும் நடைபயணத்தை ராகுல்காந்தி நிறுத்தி உள்ளார்.



இன்று மாலை நடைபயணம் குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் விமானம் மூலம் கூர்க் மலைப்பகுதிக்கு ராகுல் செல்ல உள்ளார். காங்கிரஸ் செயல் தலைவர் சோனியா காந்தியும் இன்று டெல்லியில் இருந்து கர்நாடகாவுக்கு வந்தார். அவரும் கூர்க் பிராந்தியத்துக்கு செல்கிறார்.



அங்குள்ள தனியார் ஓட்டலில் சோனியாவும், ராகுலும் தங்குகிறார்கள். அடுத்த 2 நாட்கள் சோனியா, ராகுல் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அங்கு தங்கியிருந்து காங்கிரசின் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசிக்க உள்ளனர்.



மீண்டும் ராகுல்காந்தி 6 ஆம் திகதி நடைபயணத்தை தொடங்க திட்டமிட்டு உள்ளார். அப்போது அவருடன் சோனியாவும் நடைபயணத்தில் கலந்து கொள்கிறார்.



சோனியா, ராகுல் இருவரும் இணைந்து நடைபயணம் மேற்கொள்வதால் கர்நாடகாவில் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்த உள்ளனர். பிரியங்காவும் நடைபயணத்தில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Nov17

பாகிஸ்தானின் நரோவல் மாவட்டத்தில் கர்தார்பூர் என்ற இடà

Aug24

சென்னையில் அனைவருக்கும் 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்க

Jul05

தமிழகத்தில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சு

May23

கட்சி மாறுவதற்காக வேறொரு கட்சி தலைவரை ஒரு முறையாவது நà®

Jul03

சென்னையில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷà¯

Aug12

மத்திய அரசின் விவசாய திட்டங்கள் மற்றும் வேளாண் திட்டங

Mar26

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் நேற்

Jun25

டாய்கேத்தான்-2021 ’ என்ற பெயரில் நடைபெற்ற பொம்மைகள் கண்

Jan31

பிரபல திரைப்பட நடன இயக்குநர் கலா, பாஜகவில் இணைந்தார். ப

Feb04

‘இனி தே.மு.தி.க.வுக்கு அரசியலில் ஏற்றமே கிடையாது. இறங்à

Mar09

இந்தியாவில் 2020-ம் ஆண்டில் கொரோனா தொற்று பாதிப்பு தொடஙà

Mar16

மும்பை காங்கிரஸ் தலைவராக பாய் ஜக்தாப் கடந்த டிசம்பர் à®

Jan02

உத்தர பிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடை

Feb02

தமிழக சட்டசபை வரவு செலவுத் திட்ட கூட்டத்தொடரை பெப்ரவர

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (03:59 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (03:59 am )
Testing centres