மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்த இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் இன்று (திங்கட்கிழமை) மாலை மன்னார் மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
இந்த விஜயத்தின் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அ.ஸ்ரான்லி டிமேலுடன் விசேட கலந்துரையாடலை மேற்கொண்டார்.
குறித்த கலந்துரையாடலின் போது மன்னார் மாவட்ட நிலவரம் தொடர்பாக அரசாங்க அதிபரினால் விளக்கமளிக்கப்பட்டதுடன் அரசாங்கத்தினால் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் மற்றும் அபிவிருத்திப் பணிகள் மாவட்ட மக்களுக்கு தேவைப்பாடாக உள்ள விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்தோடு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புதல், நிலையான வாழ்வாதார வழிவகைகள் மற்றும் கிராம மட்ட உட்கட்டமைப்பு விடயங்கள் உள்ளிட்ட மேலும் பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடி உள்ளதுடன், தூதுவரை கௌரவிக்கும் முகமாக மாவட்ட அரசாங்க அதிபரினால் நினைவுப் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த சந்திப்பில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் பிரதம உள்ளக கணக்காய்வாளர் மூவரும் கலந்துகொண்டிருந்தனர்.
மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகள் மீண
இலங்கைக்கு தொடர்ச்சியாக எரிபொருளை வழங்க முடியாது என இ
நஷ்டத்தில் இயங்கும் மத்தள சர்வதேச விமான ந
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள
போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோக
இலங்கை சர்வதேச பிணையங்களுக்கான கொடுப்பனவைச் செலுத்த
மன்னார் மாவட்டச் செயலகத்தின் 2022 ஆண்டுக்கான வாணிவிழா ந
மட்டக்களப்பு பொலன்னறுவை எல்லைக்கிராமமான வடமுனை ஊத்த
இலங்கைக்கு உரம் வழங்க ஈரான் அரசாங்கம் விருப்பம் தெரிவ
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் - தலைமன்னார்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கும், கூட்டணியின் பங்காளி
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கா
ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடர
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது
தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் முக்கிய மூன்று கட்சி