இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 2-வது டி20 போட்டி அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
ரோகித் சர்மா, கேஎல் ராகுல் சிறப்பான தொடக்கம் அளித்த நிலையில் 10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் எடுத்துள்ளது.
இந்நிலையில் போட்டியின் 7-வது ஓவரில் மைதானத்திற்குள் அழையா விருந்தாளியாக பாம்பு ஒன்று நுழைந்தது. பாம்பு மைதானத்திற்குள் நுழைந்ததை கவனித்த தென் ஆப்பிரிக்க வீரர்கள் சற்று அதிர்ச்சியடைந்து உடனடியாக இது குறித்து நடுவரிடம் தெரிவித்தனர்.
பாம்பு செல்லும் பகுதியில் இருந்து விலகிய வீரர்கள் பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர். பின்னர் பாம்பு பிடிப்பவர்கள் விரைந்து வந்து மைதானத்திற்குள் சுற்றிய பாம்பை பிடித்து சென்றனர். மைதானத்திற்குள் பாம்பு நுழைந்ததால் தடைபட்ட ஆட்டம் சிறிது நேரம் கழித்து மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
போட்டி நடைபெற்று வரும் மைதானத்திற்குள் பாம்பு நுழைந்த சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
டெஸ்ட் கிரிக்கெட்டின் 145 ஆண்டுகால வரலாற்றில் ஒரு வித்த
இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல
ஆஸ்திரேலிய அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 5
ஐ.சி.சி. இருபதுக்கு - 20 உலகக் கிண்ண போட்டித் தொடர் ஒக்டோப
டோயோட்டா தாய்லாந்து ஓபன் (Thailand Open) சர்வதேச பேட்மிண்டன் போ
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அ
16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி வி
பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் வ
ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல டென்னிஸ் வீர
ஐ.பி.எல். போட்டியில் கடந்த முறை டெல்லி கேப்பிட்டல்ஸ் அண
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து
உலகக்கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டித் தொடர
பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை டெ
அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள ரி-20 உலகக்கிண்ணத் தொடருக
டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி போட்டியின் அரையிறுத
