யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்டு வந்த கும்பலின் முதன்மை சந்தேக நபர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாவடியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
மானிப்பாயில் அண்மையில் இருவேறு வீடுகளுக்குள் புகுந்து பெறுமதியான பொருள்களை அடித்துச் சேதப்படுத்தியமை கடந்த வருடம் அரியாலை மற்றும் பளையில் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞன் தேடப்பட்டு வந்தார்.
அவருக்கு மோட்டார் சைக்கிள் வழங்கியமை தொடர்பில் ஒருவரும் வன்முறையில் ஈடுபட்ட இருவரும் என மூவர் கடந்த மாதம் கைது செய்யபட்டனர்.
அவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் முதன்மை சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
சந்தேக நபரிடமிருந்து 3 வாள்கள், மோட்டார் சைக்கிள் என்பன சான்றுப்பொருள்களாக கைப்பற்றப்பட்டு ள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் ஐவர் தேடப்படுகின்றனர் என்றும் பொலிஸார் கூறினர்.
இந்தக் கைது நவடிக்கையை முன்னெடுத்த யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் தலைமை பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்ஸிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
திடீரென மயக்கமடைந்ததன் காரணமாக, 12 மாணவர்கள் வட்டவளை
நெடுந்தீவில் பனங்கானி மேற்க்கு கரையில் தொழிலு
கொழும்பு துறைமுகத்தில் இரண்டு எரிபொருள் தாங்கி கப்பல
மருத்துவ பீட மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு
இலங்கை விமானப்படையின் 70ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஏ
அண்மை நாட்களில் டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறு
அஸ்ட்ரா-செனகா தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கு ப
சாவகச்சேரியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் ஒரு
நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (08) 24 கரட் தங்கப
இலங்கைக்கு இன்றையதினம் (29-05-2022) டீசல் அடங்கிய கப்பல் ஒன்ற
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர
இன்று (02) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவி
காணாமல் போனதாக கூறப்படும் பம்பலப்பிட்டி – புனித பீட
இன்னும் இரண்டு வாரங்களில் அரசாங்க கட்சியை ஒரு நிலைப்ப