70 சதவீத சம்பள உயர்வைக்கோரி இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தினரால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
தலவாக்கலை நகரில் நடைபெற்ற இப்போராட்டத்தில் நாடு தழுவிய ரீதியில் உள்ள இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.
மேற்படி சங்கத்தின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்டோரின் பங்கேற்புடன் தலவாக்கலை மல்லியப்பு கோவில் சந்தி பகுதியில் ஆரம்பமான பேரணி, தலவாக்கலை நகரை வந்தடைந்து அங்கு பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சம்பள உயர்வு மற்றும் தொழில்சார் சலுகைகளை வலியுறுத்தும் பதாதைகளை தாங்கியவாறு சங்க உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2019 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தம் நேற்றுடன் (30.09.2022) காலாவதியானது, இந்நிலையில் தற்போதைய வாழ்க்கைச் சுமைக்கேற்ப 70 வீத சம்பள உயர்வு வேண்டுமென இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம் வலியுறுத்துகின்றது.
எனினும்இ 24 வீத சம்பள உயர்வை மூன்று கட்டங்களாக வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் முன்வந்துள்ளது. இதனை ஏற்க மறுத்தே தமது கோரிக்கை ஏற்கப்பட வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் இடம்பெறுகின்றது.
தோட்டக் கம்பனிகளின் லாபம் மும்மடங்காக அதிகரித்துள்ள நிலையில், இந்த சம்பள உயர்வை வழங்கக்கூடியதாக இருக்கும் என போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.
மலையக மக்கள் முன்னணி உட்பட மலையகத்திலுள்ள தொழிற்சங்கங்கள் பல இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாண பாதுகாப்புப் படை தலைமையகத்தின் படையினர் - ய
தமது தோட்டப்பகுதியில் உள்ள நூறு ஏக்கர் காணி தனியாருக்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தற்போது சற்று செயலற்ற நிலையில்
மின் உற்பத்திக்கு போதிய எரிபொருள் கிடைக்காத காரணத்தி
முல்லைத்தீவு குருந்துார் மலை மற்றும் வவுனியா வெடுக்க
இலங்கைக்கு உரம் வழங்க ஈரான் அரசாங்கம் விருப்பம் தெரிவ
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்து ஆராய நியமிக்
மகா சங்கத்தினரின் திட்டத்தின் படி கோட்டாபய ராஜபக்ச மக
Aflatoxin அடங்கியுள்ள திரிபோஷா அழிக்கப்பட்டுள்ளதனால்,
நடைமுறைப்படுத்தவிருந்த ஊரடங்கு சட்ட நேரத்தில் மாற்ற
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக பிரதான எ
கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்தை கடந்த ஒரு மாதத்தில் ஒ
யாழ்ப்பாணத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட
மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபை பிரதி முகாமையாள
