யாழ்ப்பாணத்தில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்த 11 வர்த்தகர்களுக்கு 1 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை பொது சுகாதார பரிசோதகர் பிரிவில் கடந்த 20ஆம் மற்றும் 21ஆம் திகதிகளில் பொது சுகாதார பரிசோதகரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது 10 வர்த்தக நிலையங்களில் காலாவதியான பொருட்கள் மீட்கப்பட்டன.
அதேவேளை நல்லூர் பொது சுகாதார பரிசோதகர் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது ஒரு வர்த்தக நிலையத்தில் இருந்து காலாவதியான பொருள் மீட்கப்பட்டன.
குறித்த இரு பொது சுகாதார பரிசோதகர்களினாலும் தமது பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது காலாவதியான பொருட்களை கடைகளில் வைத்திருந்த உரிமையாளர்களுக்கு எதிராக நேற்றைய தினம் வியாழக்கிழமை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.
வழக்கு விசாரணையின் போது 11 கடை உரிமையாளர்களும் தமது குற்றத்தினை ஏற்றுக்கொண்டதை அடுத்து மன்றினால் உரிமையாளர்களுக்கு மொத்தமாக 1 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது.
குழந்தைகளின் போசாக்கின்மை தொடர்பாக யுனிசெஃப் முன்னர
பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினால் இலங்கை மக்களி
படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் டி.சிவராமின் நினைவ
வவுனியா தரணிக்குளம் பகுதியில் தலையில் காயங்களுடன் மூ
எந்த வித தாமதமும் இல்லாது சகல மக்களின் உரிமைகளையும் உ
காலிமுகத்திடல் பகுதியில் வழமைக்கு மாறாக திடீரென பொலி
தெற்காசியாவின் முதலாவது டிஸ்னிலான்ட் இலங்கையில் நிர
வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழக்கு தொடர
நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்
வவுனியாவில் மேலும் 16பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்
அனைத்து வீதி விளக்குகளையும் இன்று முதல் மார்ச் 31 ஆம் த
வீரகெட்டிய, அத்தனயால பிரதேசத்தில் வசிப்பவர்கள் பொலிஸ
கடந்த வாரம் மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட கோளாறு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 25ம் திகத
மன்னாரில் இன்றைய தினம் காலை தியாகதீபம் திலீபனின் நினை
