விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சை உடனடியாக பெற்றுக்கொள்ளுமாறு நாமல் ராஜபக்ஷவிடம் சிலர் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விளையாட்டு சங்க அதிகாரிகள், முன்னாள் வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் அடங்கிய குழுவினர் நாமல் ராஜபக்ஷவை சந்தித்துள்ளதாக விளையாட்டுத்துறை தொடர்பான தகவல்கள் தெரிவிக்கின்றன.
விளையாட்டுத்துறையை தன்னிச்சையாக கட்டுப்படுத்த அமைச்சு தயாராகி வருவதாகவும் சரியான திட்டமிடல் மற்றும் எதிர்கால பார்வை இன்றி இலங்கையில் விளையாட்டுகள் தற்போது வழிதவறி வருவதாகவும் முன்னாள் விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் நாமல் ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட திட்டம் இன்றி மேற்கொள்ளப்படும் இந்தச் செயற்பாடுகளினால் விளையாட்டுத்துறையின் எதிர்காலம் பாரிய ஆபத்தில் உள்ளதாக நாமலிடம் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவேஇ விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சை உடனடியாக பெற்றுக்கொள்ளுமாறு நாமல் ராஜபக்ஷவிடம் அதிகாரிகள், முன்னாள் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தனக்கு அமைச்சுப் பதவியை பெற்றுக் கொள்வதில் விருப்பம் இல்லை என்றும் ஆனால் தேவைப்பட்டால் அமைச்சுப் பதவியை பெற்றுக்கொள்ளவும் தயார் எனவும் நாமல் இங்கு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
விளையாட்டுத்துறை, துறைமுகம் உட்பட பல அமைச்சுகளின் அமைச்சர்கள் மாறப்போவதாக கடந்த வாரம் அரசியல் களத்தில் பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் மனித உரிமை மீறல்களில் ஈடு
கண்டி மாநகர எல்லைப் பகுதியில் உள்ள மஹியாவை பகுதியின்
சிறுநீரக நோயாளர்களை பரிசோதிப்பதற்காக நவீன தொழில்நுட
நிதி மோசடிச் சம்பவத்தில் ஈடுபட்டு சிறையில் உள்ள சந்தே
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய கு
ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பின
இலங்கையில் பாதுகாப்பற்ற பாலுறவில் ஈடுபட வேண்டாம் என எ
அம்பாறை திருக்கோவில் காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட ப
விடுதலைப்புலிகளுடனான போரில் பழிவாங்கும் உணர்வு இருந
கொழும்பின் புறநகர் பகுதியான கடவத்தை பிரதேசத்தில் காத
பெலியத்தவிலிருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த ரயி
தேசிய கடல்சார் வளங்களை பாதுகாக்கும் வாரம் எனும் தொனிப
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றம் வ
வங்கி கட்டமைப்பில் வீழ்ச்சி ஏற்படக்கூடும் என வெளியாக
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் சிறுவன் மீது வன்முறை கு
