இலங்கை இன்று வரலாற்றில் என்றும் இல்லாதவாறு வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் காரணமாக மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்தநிலையில் 74 வருட அனுபவத்தைக் கொண்டு அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கான எநத முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றம் சுமத்தினார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், போரின் பின்னர் 13 வருடக்காலத்தில் கூட வடக்குகிழக்கு கடல் ரீதியான பொருளாதாரம் அனைத்து அரசாங்கங்களினாலும் திட்டமிட்டு ஒடுக்கப்பட்டுள்ளது.
19வது திருத்தம் மீண்டும் கொண்டு வரப்படவேண்டும் என்று கூறப்படுகின்ற நிலையில் அது நடைமுறையில் இருந்தபோதும் பல கோடி ரூபாய்கள் கொள்ளையிடப்பட்டதாக கஜேந்திரன் குறிப்பிட்டார்.
இனவாதத்தை இந்த நாடு என்று கைவிடுகிறதோ அன்றே நாட்டுக்கு விடிவுக்கிடைக்கும் என்றும் கஜேந்திரன் தெரிவித்தார்.
எதிர்கட்சியின் சார்பில் உரையாற்றியவர்கள் சர்வதேச நன்கொடையாளர்களின் மாநாட்டை நடத்தும் கோரியபோதும், புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவியை பெற்றுக்கொள்வதில் பின்னிற்கிறார்கள் என்று கஜேந்திரன் குற்றம் சுமத்தினார்.
இதேவேளை இன்று இலங்கைக்கு நிவாரணத்தை வழங்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , இலங்கையில் ஒற்றையாட்சி ஒழிக்கப்பட்டு தமிழ் தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி தீர்வு ஏற்பட உதவியளிக்கவேண்டும் என்றும் கஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மறைந்த தென்னிந்திய நடிகர் விவேக்குக்கு அஞ்சலி செலுத்
இந்தியாவின் சீரம் நிறுவனத்திடம் இருந்து தடுப்பூசிகள
இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இராணுவ அ
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் பெரிய
காலாவதியான சாரதி அனுமதி பத்திரத்தின் செல்லுபடியாகும
கண்டி, அலவத்துகொட பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட நி
பொலிஸ் திணைக்களத்தின் முன்னாள் உத்தியோகஸ்தர் ஒருவர்
இலங்கையில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான அதிகபட்ச சி
கோவிட் தொற்றின் டெல்டா மாறுபாடு கொழும்பு நகராட்சி மன்
மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிர்மாண
உலகநாயகன் கமல
சாரதி அனுமதிப்பத்திரத்தின் காலத்தை ஒரு வருட காலத்திற
சந்தையில் தேங்காயின் விலையும் 10 முதல் 15 ரூபாவினால் அ
சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கல்வி
காலநிலை மாற்றத்தால் இலங்கை மிகவும் பாதிப்படைவதாக ஜனா