குறைந்த விலையில் சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கு தாய்லாந்தின் சியாம் எரிவாயு நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த 2 இரண்டு ஆண்டுகளில், எரிவாயுவை இறக்குமதி செய்யப்பட்ட ஓமான் நிறுவனம், மெட்ரிக் டன் ஒன்றுக்கு அறிவிட்ட தொகையை விடவும் 9 டொலர் குறைவாக, புதிய நிறுவனத்திடமிருந்து எரிவாயுவை பெற்றுக் கொள்ள முடியும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஓமான் நிறுவனத்துடனான ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, இடம்பெற்ற விலைமனு கோரலின் அடிப்படையில், புதிய நிறுவனம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டுக்கு அவசியமான சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்காக அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றதாக நேற்று தெரிவிக்கப்பட்டது.
இதன்படி, இலங்கையின் சமையல் எரிவாயு கேள்வியில் 70 சதவீதமானவை குறித்த நிறுவனத்திடமிருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளது.
குறித்த நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தந்திற்கு அமைய, ஒரு வருட காலத்திற்காக இலங்கைக்கு 3 இலட்சம் மெட்ரிக் தொன் எரிவாயு விநியோகிக்ப்பட உள்ளது.
வட மாகாணத்தில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் நேற்று (05) இடம்
உடன் அமுலுக்கு வரும் வகையில் இனிப்பு வகைகளின் விலையை 10
பராமரிப்பு பணிகள் காரணமாக நிறுத்தப்பட்ட நுரைச்சோலை ம
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் பிரதமர்
இலங்கைக்கு மேலும் கடன் வழங்குவதைத் தவிர்ப்பது குறித்
கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனம் எதிர்காலத்தில் சீனாவில
நடமாட்டத்தடை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மட்டுப்படுத
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ம
வென்னப்புவ பகுதியில் புகையிரதத்தில் மோதி நபர் ஒருவர்
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் வெஸ்ட் ரேட
கிராமப்புற மக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்த வேண்டி
வவுனியா நகரப்பகுதி இராணுவம் மற்றும் காவற்துறையரால் ச
யாழ்ப்பாணம் காவற்துறை பிரிவுக்குட்பட்ட கொக்குவில் ப
நாட்டில் தற்போது நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக சாரத
பதுளை - ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி ஒருவர
