அமராவதி: ஆந்திராவில், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிக்கொண்டிருந்த மாணவியின் மீது திடீரென மின்விசிறி கழன்று விழுந்தது. இச்சம்பவத்தில் அந்த மாணவி காயமடைந்துள்ளார்.
ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அப்பள்ளியின் ஒரு தேர்வு அறையில் திடீரென மின்விசிறி ஒன்று கழன்று தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவி ஒருவரின் மீது விழுந்தது.
இதில் அந்த மாணவியின் கண்ணுக்குக் கீழ் மின்விசிறியின் இறக்கை கீறியுள்ளது. இதையடுத்து அந்த மாணவி உடனடியாக அருகேயுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனால் அந்த அறையில் இருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். அந்த மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு எந்த ஆபத்தும் இல்லை என்று மருத்துவர்கள் உறுதிசெய்த பிறகு தொடர்ந்து அந்த மாணவி தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார். தேர்வு முடிவடைந்த பிறகு, அந்த மாணவிக்கு மருத்துவமனை அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த மாணவி நலமாக உள்ளாதாக அப்பள்ளியின் முதல்வர் தெரிவித்துள்ளார்..
கொரோனாவிலிருந்து தப்பிக்க அனைவரும் தடுப்பூசி செலுத்
ராமசாமி படையாச்சியாரின் 104-வது பிறந்தநாளை முன்னிட்டு ச
ஆளுநர் பன்வாரிவால் புரோஹித்தை எட
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் ந
கோவையில் 76 மாத பஞ்சப்படி உயர்வு வழங்க வலியுறுத்தி, ஓய்
டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதம
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், டெல்லி வ
வடமாநிலங்களில் கோலோச்சும்
உத்தரகாண்டின் சுகாதார மந்திரி தன்சிங் ராவத் செய்தியா பாலஸ்தீனத்தில் ரமல்லாவில் உள்ள இந்திய தூதகரகத்தில், இ இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,982 பேருக்கு கொரோனா வ இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ்காந்தி கொலை வழக் பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந தமிழக மக்களின் மனங்களைக் கவரும் வகையில் திமுக தேர்தல் பெங்களூருவில் வடமாநிலத்தை சேர்ந்த ஒரு தொழிலாளி தனது ம