2022 ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல் முழுமையான தடுப்பூசி செலுத்தப்பட்டமைக்கான அட்டையை பொது இடங்களுக்கு செல்வோர் தமது கைவசம் வைத்திருத்தல் அவசியமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் குறித்த தினத்திற்கு முன்னர் கோவிட் - 19இற்கு எதிரான தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சு, பொது மக்களுக்கு தொடர்ச்சியாக வலியுறுத்தியிருந்தது.
இந்த நிலையிலேயே ஏப்ரல் 30ஆம் திகதி முதல் முழுமையாக தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்வதைத் தடை செய்து வர்த்தமானி அறிவிப்பொன்றும் வெளியிடப்பட்டிருந்தது.
எனினும் தற்போது பொது இடங்களுக்கு மக்கள் செல்ல கோவிட் தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டதை அடையாளப்படுத்தும் தடுப்பூசி அட்டையை கைவசம் வைத்திருப்பதை கட்டாயமாக்கும் வகையிலும், அவ்வாறு முழுமையான தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கும் வகையிலும் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.குறித்த வர்த்தமானி அறிவித்தலை நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்து செய்ய சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன நடவடிக்கை எடுத்துள்ளார்.
கொழும்பில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களுக்கு முன்ன
இலங்கைத் தீவில் எங்கள் தமிழ் இனத்தின் நீண்ட நெடிய வரல
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக பிரதான எ
நல்லூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன்
சாரா ஜெஸ்மின் என்றழைக்கப்பட்ட புலஸ்தினி மகேந்திரன் த
இரத்தினபுரியில் பெல்மடுல்ல, பாதகட, தேவாலேகம பிரதேசத
கொரோனாத் தொற்றுப் பரவல் சவாலை ஒன்றிணைந்து வெற்றிகரமா
வவுனியா நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த
க
நான் ஒருபோதும் பதவியிலிருந்து இராஜிநாமா செய்யமாட்டே
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் தமிழின படு
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர
அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளில் 2022ஆ
யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு ஒர
இலங்கை தொடர்பான புதிய பிரேரணை குறித்துக் வடக்கு, கிழக
