More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இடைக்கால அரசு அமைக்க கோத்தபய ராஜபக்சே முடிவு!
இடைக்கால அரசு அமைக்க கோத்தபய ராஜபக்சே முடிவு!
Apr 29
இடைக்கால அரசு அமைக்க கோத்தபய ராஜபக்சே முடிவு!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வருகின்றன. ஆனால் ராஜினாமா செய்ய வலியுறுத்தும், போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்து வரும் அதிபர் கோத்தபய மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவரும் ஆட்சியில் தொடர்ந்து நீடித்து வருகின்றனர்.



அதேநேரம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண உலக வங்கி மற்றும் சர்வதேச நாடுகளிடம் இருந்து கடன்பெறும் முயற்சிகளை முடுக்கி விட்டு உள்ளனர். அத்துடன் தங்களுக்கு எதிரான அரசியல் நெருக்கடி மற்றும் ெபாதுமக்கள் போராட்டத்துக்கு தீர்வு காணவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.



இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இலங்கையில் அனைத்துக்கட்சிகளும் இணைந்த இடைக்கால அரசு அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே திட்டமிட்டு உள்ளார். இது தொடர்பாக அனைத்துக்கட்சிகளுக்கும், சுயேச்சை எம்.பி.க்களுக்கும் கடிதம் எழுதியுள்ள அவர், அனைத்துக்கட்சி அரசு அமைக்க தயாராக இருப்பதாக குறிப்பிட்டு உள்ளார்.



நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் கொண்ட கட்சிகளின் தலைவர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், நாடு தற்போது எதிர்கொண்டு வரும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அனைத்துக்கட்சி அரசுக்கு கொள்கை அளவில் ஒப்புக்கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.



இந்த அனைத்துக்கட்சி அரசின் வடிவம் குறித்து பிரதமர் மகிந்த ராஜபக்சே தலைமையிலான மந்திரிசபை விவாதித்து முடிவு எடுக்குமாறு அறிவுறுத்தி உள்ள கோத்தபய ராஜபக்சே, 29-ந்தேதி (இன்று) நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்துக்கட்சிகளின் தலைவர்களுக்கு அவர் அழைப்பும் விடுத்து உள்ளார்.



பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகி இடைக்கால அரசு அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில், நாட்டில் அனைத்துக்கட்சிகளும் இணைந்த இடைக்கால அரசு அமைக்க கோத்தபய ராஜபக்சே முடிவு செய்துள்ளார்.



அதேநேரம் தான் பதவி விலக மாட்டேன் எனவும், எந்தவித இடைக்கால அரசும் தனது தலைமையில்தான் அமைய வேண்டும் எனவும் மகிந்த ராஜபக்சே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep20

வைத்தியசாலைகளுக்காக முன்பதிவு செய்யப்பட்ட மருந்துகள

Sep24

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள  சாம்பல்தீவு, நாயாறு, நà®

Oct07

13 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உள்படுத்திய குற்றச்à®

Sep21

வவுனியா மாவட்டத்தில் இம்மாதம் 20 ஆம் திகதி வரை 2222 கொரோனா

Sep16

இந்திய – இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை விரைவிà®

Mar14

தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரிணà

Mar12

யாழ்ப்பாணம் கடற்பரப்பரப்பிற்குள் அத்துமீறி கடற்றொழி

Mar23

அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளில் 2022ஆà

Jul13

இரண்டாம் கட்டத்துக்கான முதல் டோஸ் தடுப்பூசியை யாழ்ப்à

Aug25

வவுனியா மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட 5 ஆயிரத்து 800 பà

Oct20

சட்டவிரோத மற்றும் சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்à®

May20

இன்னும் ஓரிரு மாதங்களில் தற்போதைய பிரதமர் ரணில் விக்ர

Jan28

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை அடுத்த மாதம் ந

Aug02

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி

Oct04

வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை à

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (10:29 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (10:29 am )
Testing centres