More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • பிரதமர் மோடி நாளை முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை!
பிரதமர் மோடி நாளை முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை!
Apr 26
பிரதமர் மோடி நாளை முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை!

இந்தியாவில் சில மாநிலங்களில் சமீப நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவும் ஆற்றல் கொண்டதால் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிகிறது.



குறிப்பாக டெல்லி, அரியானா, மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா பரவல் மிகவும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கொரோனா தொற்றின் 4-வது அலை பரவத் தொடங்கி விட்டதாகவும் கருதப்படுகிறது.



கடந்த 24 மணி நேரத்தில் நாடுமுழுவதும் 2,483 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 15,636 ஆக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.



இதன் காரணமாக முக கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பது போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பல மாநிலங்களில் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.



தமிழகம், தெலுங்கானா, டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் பொது இடங்களில் முக கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளும் தொடங்கியுள்ளன.



இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக அனைத்து மாநில முதல்- மந்திரிகளுடன் பிரதமர் நரேந்திரமோடி நாளை காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.



இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆந்திரா முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி, கர்நாடகா முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்ளிட்ட தென் மாநில முதல்-மந்திரிகளும் பங்கேற்கிறார்கள். மேற்குவங்காள முதல்- மந்திரி மம்தா பானர்ஜியும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.



நாளை (27-ந்தேதி) பகல் 12 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா மற்றும் பிரதமர் அலுவலக, உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.



இந்த கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூ‌ஷன் கொரோனா பரவல் அதிகரித்து வருவது தொடர்பாக விளக்கம் அளிக்கிறார். கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படலாம் என்று தெரிகிறது.

 



கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்துவது, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr25

சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்

Feb22

கர்நாடக மாநில சட்டப்பேரவையில், சட்டப்பேரவை சம்பளமà¯

Mar30

கோவையில் பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருபà

Jan19

குடியரசு தின அணிவகுப்பில் ரஃபேல் போர் விமானங்கள் காட்

Mar28

ஆந்திராவில் நடந்த சாலை விபத்தில் 5 பெண்கள் உட்பட 8 தமிழà®

May22

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு தடுப்பூசà®

Jul04

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு நேற்று அறà

Jan01

சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கை

Aug05

கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட உண்மையான இறப்பு எண்ணிக்

Feb05

நாடாளுமன்றத்தில் விவசாயிகள் பிரச்சினையைப் பற்றி விவà®

Feb20

கர்நாடகத்தில் சுமார் ஒரு ஆண்டுக்கு பிறகு 6 முதல் 8-ம் வகà

Oct02

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு அக்டோபர் மாதம் 17-ந

Mar08

தமிழக அமைச்சர் சேகர்பாபு மகள் காதல் திருமணம் செய்து கà¯

Mar10

அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக ஆகியவற்றுக்கான தொகுதிப்

Jul16

நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் நீதிமய்யம் கட்சி படு à®

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (09:17 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (09:17 am )
Testing centres